
பஸ் புறப்படத் தயாராக இருந்தது.
அப்போதுதான் ஒரு கிழவி வந்து ஏறினாள்.
அவளுக்கு நிற்கதான் முடிந்தது. அவ்வளவு கூட்டம். நடத்துனர் இளைஞன். கிழவியைப் பார்த்து, “கொஞ்ச நேரம் நில்லு.. சரியான இடம் பார்த்து உட்கார வைக்கிறேன்,” என்றான்.
பஸ் வேகமெடுத்தது. கிழவி சரியாக நிற்கமுடியாமல் அங்கும் இங்கும் ஆடிக்கொண்டிருந்தாள்.
குறுக்கே எருமை மாடுகள் வந்ததால் திடீரென்று பிரேக் போட்டார் டிரைவர்.
அவ்வளவுதான் விழப்போன கிழவியை நடத்துனர் பிடிக்க, இரண்டு பேரும் பஸ்சுக்குள் உருண்டனர். எல்லோரும் வேடிக்கைப் பார்த்தவர்கள்
கொல்லென்று சிரித்தார்கள்.
