வலி/ கோ.முத்துசுவாமி

புற வலிகளில்
பொல்லாதது கண் வலி!

புறப் பார்வையையும்
அகப் பார்வையையும்
புறந்தள்ளி
முன்னிற்கும் வலி!

கண்களை
சொட்டு மருந்தினால்
குளிர வைத்தாலும்
விட்டு விட்டு வாட்டும் வலி!

வாசகனுக்கும்
எழுத்தாளனுக்கும்
வரவே கூடாத வலி!

வந்து தொலைத்தால்
வலி பொறுக்கும் வழி?

நினைவில் நிற்கும்
சுகமான கவிதைகளை
மனதில் அசை போட்டுக்
கொண்டிருப்பதே! 😊