வருடம் 1911/iசா

வழக்கம் போல அன்றும் சாரதி மக்களிடம் கெஞ்சினான்.

“அட … ஒன்னும் ஆகாது தைரியமா ஏறுங்கப்பா. நான் ஒரு நாளைக்கு நாலு தடவ இந்த வழியா போயி வந்துகிட்டு தான இருக்கேன்.. பாக்கறிங்க இல்ல”

“யதானும் ஆச்சுன்னா நீ குதிச்சு ஒடிடுவ.. நாங்க என்ன பண்ண? இந்த மெஷின் பாரம் தாங்காது, அச்சாணி கிடையாது, நம்பி ஏறாதீங்கனு நம்ம மருது நேத்திக்கு கூட சொன்னான்”

“முதல்ல இது மெஷின் இல்ல.. இது பேரு பஸ்”

“நீ தஸ்ஸு புஸ்ஸுனு ஏதோ சொல்லற.. எங்களுக்கு அதெல்லாம் புரியலப்பா” என்றாள் வெள்ள சட்ட வள்ளியாத்தா வெள்ளன்தியாக.

“ஏய் .. குட்டி பையா கதிரு, நீயானும் ஏறுடா.. நீ கணம் கம்மி தான?”

“யே யப்பா.. சாரதி, நம்ம ஊரு ஆளு நீ, நம்ம ஊரு குழந்தய அபாயத்துல மாட்டப் பாக்கற? கிளம்பு.. கிளம்பு..என்று சாரதியை விரட்டினார் ” வழுக்க தல வளவன்.

சாரதி அன்றும் ஏமாற்றத்துடன் கிளம்ப, சந்தைக்கு போன மாட்டு வண்டி வருவதற்காக காத்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள்.