ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 15

12.10.2021


அழகியசிங்கர்

அழகியசிங்கர் : நேற்று இரவு 11.30 ஆகிவிட்டது.  அதனால் ஆசிரியர் பக்கம் எழுதாமல் தூங்கப் போய் விட்டேன். ஒரு நாளாவது இந்த இணைய இதழில் ஆசிரியர் குறிப்பு இல்லாமல் வரக்கூடாது என்று தோன்றுகிறது.

ஜெகன் : ஆசிரியர் குறிப்பு என்றால் என்ன வெறும் அரட்டையா?

அழகியசிங்கர் : அப்படி ஆகிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

மோகினி : எல்லாம் லிட்டரேச்சராக இருக்க வேண்டுமென்று அவசியமில்லை.  அரட்டையாகக் கூட இருக்கலாம்

ஜெகன் : நானும் அப்படித்தான் சொல்கிறேன்.

அழகியசிங்கர் : தினமும் ஆசிரியர் பக்கம் எழுத முயற்சி செய்யலாம்.

மோகினி : இந்த வருடம் நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவரைப் பற்றித் தெரியுமா?

அழகியசிங்கர் : தெரியாது. அப்துல் ரஸக் குருனா என்ற பெயரை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.  இனிமேல்தான் அவரைப் பற்றி விஷயங்களைத் தேடிப்பிடிக்க வேண்டும்.

ஜெகன் : ஏன் எத்தனையோ எழுத்தாளர்களைப் பற்றி நமக்குத் தெரிய வாய்ப்பில்லை. 

அழகியசிங்கர் : இந்திய அளவிலே பல மொழிகளில் எழுதக்கூடிய சிறந்த எழுத்தாளர்களைப் பற்றி நமக்குத் தெரியாது.  அவர்களுடைய புத்தகங்கள் தமிழில் வந்தாலும் நாம் படித்ததில்லை.

மோஹினி : அங்கே ஏன் போக வேண்டும்.  தமிழில் வெளிவந்த எத்தனைப் புத்தகங்கள் உங்களுக்குத் தெரியும்.

அழகியசிங்கர் : முழுக்கத் தெரியும் என்று சொல்வதற்கில்லை  மிகக் குறைவான புத்தகங்களையே நாம் வாங்கிக் குவிக்கிறோம்.  படித்து மகிழ்கிறோம். 

ஜெகன் : அதுதான் முடியும்.

அழகியசிங்கர் : சமீபத்தில் ஆங்கிலப் பேராசிரியர் ஆர் ராஜகோபாலன் எழுதிய இயந்திர மாலை என்ற கதைத் தொகுப்பை எடுத்துக் கொண்டு உரையாடினோம்.

மோஹினி : இப்போது எழுதுபவர்களுக்குத் தெரியாது.  

அழகியசிங்கர் : யாருக்கும் தெரியவில்லை. நான்தான் அவரைப் பற்றி சொல்ல வேண்டியிருந்தது.

ஜெகன் : இதுமாதிரி எத்தனையோ திறமையான எழுத்தாளர்கள் யாருக்கும் தெரியாமலேயே இருக்கிறார்கள்.  

அழகியசிங்கர் : அவர்களை எல்லோருக்கும் தெரியப் படுத்துவது என் நோக்கம்.

மோஹினி : ஆசிரியர் பக்கம் ஒவ்வொருநாளும் ஒன்றரைப் பக்கம் இருப்பது நல்லது.  முடிந்து விட்டது.

அழகியசிங்கர் : நன்றி  

2 Comments on “ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 15”

  1. ஆசிரியர் பக்கத்தில் சுவாரசியமான ஓர் உரையாடல் மூலம் கருத்துக்களைப் பகிரும் உத்தி வெகு நன்று. இன்னும் நாளிதழில் ‘சொல் விளையாட்டு’ போன்ற பகுதிகளைச் சேர்க்கலாம்.

Comments are closed.