நாயின் நிழல் சுவற்றின் மீது நடந்து போகிறதுநான்கு கால்களில்
அடைக்கப்பட்டிருக்கும் ஒரு இரும்பு கதவை முகர்ந்து விட்டுவெறுமையுடன் திரும்பி செல்கிறதுஇன்னொரு வாசலுக்கு
அசைவற்ற தெருக்களில்விரவிக் கிடக்கும் வெறுமையையார் தூவியதோ?
காற்றை யாசித்துகையேந்தி நிற்கும் மரங்களிடம்பேசுவதற்கு ஆறுதலான வார்த்தைஒன்றுமி.ல்லை
ஈசல் பூச்சியைப் போலஅதன் நிழலை பிடித்துண்ணும்வளர் இருளில்ஒரு சருகைப் போலஅசைந்தாடிப் போகிறதுஅதன் வால்

