
க.நா.சுப்ரமணியம் ராஜியை மணந்தார்.
க.நா.சுப்ரமணியம் ராஜியை மணந்தார். (சா.கந்தசாமி அவருடைய நூல் ஒன்றை ராஜி சுப்ரமணியத்திற்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார்) அவர்களுக்கு ஒரே மகள். அவருடைய மகளை மணந்தவர் பாரதி மணி என அறியப்பட்ட நடிகரும் எழுத்தாளருமான கே.எஸ்.எஸ்.மணி.
க.நா.சுப்ரமணியம் ஒரு வகையான நாடோடி வாழ்க்கையை வாழ்ந்தார். பெரும்பாலும் உணவுவிடுதிகளிகலேயே உண்டார். வெவ்வேறு ஊர்களுக்கு தன்னுடைய சிறிய ஆலிவெட்டி போர்ட்டபிள் தட்டச்சு இயந்திரத்துடன் சென்று தங்குவது அவருடைய வழக்கம். நாகர்கோயிலில் அவர் வந்து தங்கியதை சுந்தர ராமசாமி தன் நினைவோடை நூலில் சொல்கிறார். பல்வேறு ஊர்களில் தங்கியதைக் க.நா.சுவின் முன்னுரைகள் சொல்லிக் கொண்டிருக்கின்றன என்று சொல்லும் பழ.அதியமான் கீழ்க்கண்டவற்றைச் சுட்டிக்காட்டுகிறார். ஆடரங்கு முன்னுரை தாம்பரத்திலிருந்து (ஏப்ரல் 12, 1955) எழுதப்பட்டிருக்கிறது. ஆட்கொல்லி, படித்திருக்கிறீர்களா ஆகியவற்றின் முன்னுரைகள் திருவனந்தபுரத்தில் (1959) உருவாகியுள்ளன. தில்லியில் கலை நுட்பங்கள் முன்னுரையும், மைசூரில் பித்தப்பூவுக்கான முன்னுரையும் தயாராகியுள்ளன. நல்லவர் முன்னுரை மதுரையிலிருந்து எழுதப்பட்டது. சர்மாவின் உயில் தயாரானது சிதம்பரத்தில் என முன்னுரை சொல்கிறது.
நன்றி: தமிழ் விக்கி
தகமல் பகிர்ந்தவர்: கந்தசாமி ஆர்
நன்றி: தமி
