எல்லாரும் அழுத கதை!

🤣உமா பாலு 

.அப்பா வேறு ஊரில் இருந்ததாலும் அம்மா உடல் நிலை சரியில்லாததாலும் என் கல்லூரி விடுமுறையில் நாலு வயது தம்பியை அழைத்துக் கொண்டு பள்ளியில் சேர்க்கச் சென்றிருந்தேன் .

தலைமை ஆசிரியை அவன் இங்கேயே இருக்கட்டும் நீ போய் உன் அம்மாவை அனுப்பு என்றதும் அருகில் இருந்த வீட்டுக்கு வந்து அம்மாவிடம் கூற அம்மா அவன் அப்போதே வந்து விட்டானே என எனக்கு முன் ஓடி வந்து வீட்டில் பதுங்கி இருந்த தம்பியை பார்த்து பல் கடித்தேன்.

அன்று முதல் நாள் என் தம்பியை பள்ளியில் விட்டு விட்டு வீடு திரும்பினேன்.மாலை மூன்றரை மணிக்கு அவனுக்குத்தான் வழி தெரியுமே என புலம்பிய படி திரும்ப அழைத்துவரச் சென்றேன்.வகுப்பில் அவனைக் காணவில்லை .

சுற்று முற்றும் பார்த்துவிட்டு வீடு திரும்பினால் வீட்டிலும் இல்லை . பதற்றம் தொற்றிக் கொண்டது.அம்மாவும் நானும் மறுபடியும் பள்ளி சென்று எல்லா வகுப்பறைகள் கழிப்பறைகள் என்று ஓரிடம் விடாமல் தேடியும் பயனில்லை .

மணி ஆறரை ஆகி இருட்டியும் விட்டது.அம்மாவும் நானும் செய்வதறியாது அழுதபடி பள்ளி
வாசலில் நின்று இருந்த போது ஸ்கூல் பஸ் வந்து நிற்க அதனின்று குதித்த படி இறங்கினான் அருமைத் தம்பி

பின்னாலேயே ஓட்டுனர் உங்க பையனாம்மா!பஸ்ல ஏறிட்டு என் ஸீட் கிட்ட உக்காந்துட்டு பாட்டு பாடிட்டே வருது .எங்கயும் இறங்காம இருக்கு,.

புதுசா வேற இருக்கு என்ன செய்யப் போறோம்னு ஒரே கவலயாயிருந்துச்சு.ஸ்கூல் வேற இன்னேரம் மூடிடுவாங்களேன்னு நெனச்சிட்டே வாரேன் என்றார்.
தம்பியோ அம்மா ரொம்ப ஜாலியா இருக்கு என்ன பஸ்ல சேத்து விடு என்றானே பார்க்கலாம்.நடந்து ஐம்பது வருடம் ஆனாலும் மனதில்இன்றும் பசுமையாக இருக்கிறது.