
வழிதப்பிய ஒரு வெட்டுக்கிளி அது.
வாசிக்கும் செய்தித் தாளில் மோதி விழுகிறது.
நீங்கள் அந்தப் பச்சை உயிரியை அவதானிக்கிறீர்கள்.
இப்போது வெட்டுக்கிளி உங்கள் இடது சுட்டுவிரலில்.
தொழுத கையுள் பச்சை ரம்பம் ஒடுக்கியிருக்கும்
அதன் கண்ணில் ஒரு பயத்தின் பிசுபிசுப்பு.
அசைவற்றுச் சுழல்கிறது நீங்களும் வெட்டுக்கிளியுமான உலகம்.
வாசலில் அரசு ஊழியர்கள்
வாக்குச் சாவடிச் சீட்டுடன் கலைந்து நிற்கிறார்கள்.
வெட்டுக் கிளி தவிர, வேறொன்று குறித்தும்
நீங்கள் இப்போது
தீர்மானிக்கவேண்டியவர் ஆகிறீர்கள்.
%
2016?
