விடுமுறை/ஜெய ஸ்ரீராம்


ஆஹா , முழு பரீட்சை முடிந்தது. நாளையிலிருந்து ஜாலி நல்லா விளையாடலாம் என்று குஷியாக வந்தனர் என் சித்தி பசங்க ரெண்டு பேரும்.

எங்கள் குடும்பம் பெரியது. தத்தா, பாட்டி, அப்பா, அம்மா, நான் , என் தம்பி இருவர், என் தங்கை, என நாங்கள் ஆறு பேர்.

சித்தி, சித்தப்பா எங்களுடன்
இருந்தார்கள். அவருக்கு பையன் பிறந்தவுடன் வேறு ஊருக்கு மாற்றலாகி
விட்டது. இந்த வருடம் லீவுக்கு குழந்தைகளை பாட்டி வீட்டில் அனுப்பி விட்டார்கள்.

பாட்டி, தாத்தா அன்பில் குஷியாக இருந்த அவர்களுக்கு வந்தது சோதனை.

வருடா வருடம் மே மாத முதலில், ஒரு நாள் விட்டு ஒரு நாள் இரண்டு இரண்டு பேருக்கு, விளக்கண்ணை குடுப்பது வழக்கம்.

என் தங்கை, தம்பிக்கு குடுத்து அடுத்தது சித்தியின் குட்டி பையனை உட்கார வைக்க பட்ட பாடு.

என் தங்கை அழ, பாட்டி சர்க்கரை கொடுக்க, என் அப்பா கை ஓங்க, தாத்தா சிரிக்க, அம்மா கெஞ்ச,. நானும் என் சித்தி பயனும் முழிக்க அந்த விசேஷம் இனிதே நிறைவேறியது.