வீதி/ப.மதியழகன்

மரங்கள் அசைகின்றன
மேற்கே மின்னல்வெட்டு
காற்றில் மண்வாசம்
வானம் கறுத்திருந்தது
எங்கோ மழை
தெருவில் நடமாட்டம் குறைந்திருந்தது
ஆள் உயரத்திற்கு
புழுதி எழுந்தது
சருகுகளை காற்று
அலைக்கழித்தது
எங்கோ நாய் குரைக்கும்
சத்தம் கேட்டது
பூ விற்பவன்
வியாபாரம் டல்லடித்ததால்
மழை மீது கோபப்பட்டான்
முறுக்கு விற்கும் மூதாட்டி
மழைக்கு ஒதுங்க
இடம் தேடிக் கொண்டிருந்தாள்
மனிதன் ஆதியிலிருந்தே
ஆகாயத்திற்கு பயந்தான்
அறிவியல் விடைகாண
முற்பட்டாலும்
அண்ணாந்து பார்க்க
பேரதிசயமாக இருக்கிறது
வானம்
மானுட இனம்
பன்னெடுங்காலமாக
கடுகளவு பூமியில்
இருந்து கொண்டு
வாழ்க்கைப் புதிருக்கு
விடைதேடிக் கொண்டிருக்கிறது!