புத்தர்/அழகியசிங்கர்

நான் நம்புகிறேன்
நான் புத்தனென்று
என்னிடம்
பேசுகிறவர்களும்
புத்தனாக மாறி
விடுகிறார்கள்
ஒரு புத்தன்
இன்னொரு
புத்தனைப் பார்த்துப்
பேசுகிறான்

கண் சிமிட்டுகிறான்

சண்டைப் போடுகிறான்

ஒரு புத்தன்
இன்னொரு புத்தனை
சண்டையில் வீழ்த்துகிறான்

இதெல்லாம் நடந்தும்
எப்போதும்
எங்கும்
எப்படியும்
புத்தன்தான் மிஞ்சுகிறான்