
ராகுலன் தயங்கியபடி தாயிடம் சொன்னான்
அப்பா வந்திருக்கிறார்
தெரியும்
என்றாள்
ஊர்கோடியில் அமர்ந்திருக்கிறார்
என்றான்
தெரியும் என்று
தலையசைத்தாள்
அவள்
நான் போய் பார்க்கவா
என்றான்
உன்னிஷ்டம் என்றாள்
நீ வருகிறாயா எனத் தயங்கியபடி கேட்டான்
நீ போ என்றாள்
அவருக்கு ஒரு பூ தருகிறாயா என்றான்
இன்னும் மலர் உதிரவில்லை
என்றவரிடம் சொல்
என்றாள்
புத்தரை வணங்கி
நின்றான்
தாய் கூறியதை
கூறனான்
வெட்கியபடி
புன்னகை மாறாமல்
கூறினார்
அவர்
வெகு சீக்கிரத்தில் உதிர்ந்து விடும்
என்று
அவர் அறிவார்
தன்னை முழுவதும்
மன்னித்து
அவள்
புத்தராகும் நாள்
வெகு தூரத்தில் இல்லை
என்று
15/5/22 11 மணி

அருமை.