டுமீல்../அழகியசிங்கர்

எல்லோரும் அந்தத் தெருவில் கூடி டிபன் கடையில் டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். காலை வேளை. கூட்டம் கட்டுக்கடங்காமலிருந்தது. அப்போதுதான் அந்த சப்தம் எதிர்பாராதவிதமாய்க் கேட்டது.
டுமீல்
அடுக்ககத்திலிருந்து எழுந்த சப்தம் காதைப் பிளந்தது.
டிபன் தட்டுகளைத் தூக்கி எறிந்து விட்டு
எல்லோரும் ஓட்டமாய் ஓடினார்கள்.