
என்னன்னமோ செய்கிறேன்
கடைக்குப் போகிறேன்
கடற்கரைக்குப் போகிறேன்
காதலிக்கிறேன்
மிக்சர் தின்கிறேன்
உதவிகள் செய்கிறேன்
குளிக்கிறேன்
யோகாசனம் செய்கிறேன்
புத்தகம் படிக்கிறேன்
அரட்டை அடிக்கிறேன்
சமையலுக்கு ஒத்தாசையாய் இருக்கிறேன்
புதிய நண்பர் ஒருவரை கண்டுபிடிக்கிறேன்
பழைய நண்பருக்கு டாட்டா காட்டுகிறேன்
அரசியலில் ஈடுபடுகிறேன்
பந்தயங்களில் களம் இறங்குகிறேன்
வெற்றி பெறுகிறேன்
தானாக சிரித்துக் கொள்கிறேன்
இப்படி
உண்மையில் ஒரு கவிதையை எழுத முடியாத போது
மிகவும் நார்மலாக இருக்கிறேன்
