கீழ்வெண்மணி நிகழ்ச்சி/முஜிப் ரஹ்மான்

கீழ்வெண்மணி சம்பவம் குறித்து ‘வெண்மணி வேதனை’ என்று கலைஞர் தனது நெஞ்சுக்கு நீதிஇரண்டாம் பாகத்தில் விரிவாக எழுதி இருக்கிறார்.
கீழ்வெண்மணி நிகழ்ச்சி ஒரு சமுதாயக் கேடு! ஆதிக்க வெறியர்களின் கோரப் பற்களுக்கும் கூரிய நகங்களுக்கும் கிடைத்த தீனி! நிலப்பிரபு வர்க்கத்திற்கும் விவசாயத் தொழிலாளி வர்க்கத்திற்கும் ஏற்பட்ட மோதலில் முண்ட நெருப்பில் 1968ஆம் ஆண்டு 42 உயிர்கள் கருகில் செத்துச் சாம்பலாயின!

அத்தனையும் ஆதி திராவிட விவசாயத் தொழிலாளர் வீட்டு உயிர்கள் பெண்கள் 35 பேர்! பிஞ்சுகள் 4 பேர்! ஆண்கள் 3 பேர் நிலப்பிரபுக்களின் ஆதரவாளரான பக்கிரிசாமி என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து காவல் துறை, வழக்குமன்றமெனச் சென்றிருக்க வேண்டிய நிலப்பிரபுக்கள் சிவர் அதற்கு மாறாகச் சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு காட்டுமிராண்டிகள் கூடச் செய்திடக்கூசும் காரியத்தைச் செய்தனர். கத்தி கட்டாரி. வேல்கம்புகளுடன், கீழ்வெண்மணி ஆதி திராவிடர் காலனிக்குள் படையெடுத்தனர். பயந்தோடிய பலர் ஒரு வீட்டுக்குள் புகுந்து கதவைத் தாளிட்டுக் கொண்டனர். இரக்கமற்றோர் எல்லா வீடுகளுக்கும் தீ வைக்கவே. ஓடி ஒளிந்திருந்தோர்க்கு அடைக்கலம் தந்த அந்தக் குடிசையும் நெருப்புக்கு இசையானது

1968 டிசம்பர் 25ம் நாள் தமிழக வரலாற்றில் ஒரு பெருங் களங்கத்தை ஏற்படுத்திய அந்த அநாகரிக அராஜகச் செயல் கேட்டு அண்ணா துடித்துப்போனார். உணவு அருந்தவே மறுத்து விட்டார். உறக்கமே கொள்ளவில்லை. உடல்நிலை வேறு கெட்டிருந்த சமயம். உடனடியாக என்னைக் கீழ்வெண்மணிக்குச் சென்று நிலைமையை அறிந்து வரக் கட்டளையிட்டார்….

எரிந்து போன காலனியைக் கண்டு கண்ணீர் சிந்தினேன்.நாற்பத்து இரண்டு உயிர்களைப் பலி கொண்ட அந்த இடத்தைப் பார்த்துக் கதறினேன் தாய்க்குலத்தினரையும் தளிர்களையும்
உழைக்கும்கூட்டத்தையும் இப்படி உயிரோடு வைத்துக்கொளுத்திச்சாம்பல் மேடாக எப்படித்தான் அந்த நாசக்காரர்கள் துணிந்தார்களோ என்று அந்த வட்டாரமே புலம்பி அழுதது. அந்தக் கொடுஞ் செயலர் கூட்டத்திற்குத் தலைமை வகித்தவர் கோபால கிருஷ்ண நாயுடு
என்பவர்! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினர்.சட்டப்படி நடவடிக்கைகளைப் பாரபட்சமின்றி எடுத்திடுமாறு காவல்துறையினருக்கு முதலமைச்சர் அண்ணா அவர்கள் உத்தரவிட்டார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர் பி.ராமமூர்த்தி அவர்கள் சென்னைக்கு வந்து அண்ணாவைர் சந்தித்தார். கீழ்வெண்மணி நிகழ்ச்சியால் அதிர்ச்சி அடைந்திருந்த இருவரும் தழுதழுத்த குரலில் பேசிக் கொண்டபோது நான் அங்கிருந்தேன். கண்கள் குளமாகிட! (நெஞ்சுக்கு நீதி இரண்டாம் பாகம் பக், 34, 55, 36) திருமகள் நிலையம் 1987)