
கிணறு என்றால் என்னவென்று பேரக்கு
ழந்தைகள் கேட்கலாம்.ஆறு,குளம், குட்
டைகள்,ஏரி,அருவிகள் இவற்றையெல்
லாம் ஒளிப்படம் எடுத்துவைத்துக் கொள்
ள வேண்டும் இப்போது.
இப்படியான அலைச்சலில் கிட்டத்தட்ட
இறந்துபோய்விட்ட ஓரு கிணறு தென்
பட்டது பெரும்பேறு. இங்கே ஜெகடையொ
லி இனிய பிலகரிராகஆலாபனையாய்க்
கேட்டுக்கொண்டிருக்கவேண்டும். வாளி
வாளியாய் மொண்டு தலையில் கொட்டி
க்கொண்டு கங்கையில் மூழ்கிக் குளித்த
புண்ணியம் கிடைத்துவிட்டது இனி மோட்
சம்தான் என்று ஒரு கிழவி பூரித்துப்போ
யிருக்கவேண்டும்.
காதலர்கள் கொஞ்சிமகிழ இரவின் ரகசி
ய இடமாகக்கூட இருந்திருக்கலாம்.அதன்
துவைக்கும் கல்லில் உட்கார்ந்து ஒரு +2
பத்மாசனியை அவசரமாக முத்தமிட்டி
ருக்கலாம். கிணறு ஏகப்பட்ட வெட்கமும்
கொஞ்சம் பொறாமையுமாய் அந்த உத்த
ம சல்லாபத்தை ஓரக்கண்ணால் பார்த்து
வாழ்த்தியிருக்கலாம். ஒருகாகம் யோகி
மாதிரி நிமிடக்கணக்குதவறாமல் வந்து
உட்கார்ந்து கூடுதல் ஞானம் பெற்று பறந்
துபோயிருக்கலாம்.கிணறு வீட்டின் தாய்
மாதிரி,தந்தை அக்கா அத்தை தங்கச்சி
மாதிரி ஒர் உறுப்பினர் அந்தஸ்தோடு
வாழ்ந்ததுதான். கிணறும் சமையலறை
யும் பொதுவாக இருக்கட்டும் என்று சதக
ங்கள் அறிவுறுத்தும்.
இரண்டு அணிற்பிள்ளைகள் ஆக்ரோஷ
மாகச் சண்டையிட்டு சமாதானமாகி
அரவம் கேட்டு பகைமறந்து சிநேகிதத்
தோடு கிணற்றோரம் ஒளிந்து கொண்டி
ருக்கலாம்.அந்தநேரம் கிணற்றுக்குக் கூடுதல் பொலிவு சேரும் அற்புதம்.ஒரு
நள்ளிரவில் புருஷனை இழந்த அக்கம்
மா கிணற்றுக்கட்டையில் மணிக்கணக்
காய் உட்கார்ந்து அழுதழுது மனசை இற
க்கி வைத்திருக்கலாம்.ஒரு வைதீக மனு
ஷர் விபூதிப்பட்டை பளிச்சிட மூக்கைப்
பிடித்துக் கொண்டு ஜெபித்துக் கொண்டி
ருக்கலாம்.சிவருக்கு நீரெல்லாம் கங்கை-
காவிரிதான்.
தவறிவிழுந்த பித்தளைச் சொம்பை பாதாளக் கரண்டிபோட்டுத் தேடுவது
ஒருநாள்வேடிக்கை. கல்யாணம் குதிரா
வயசு தொலைத்த பவானியக்கா ஏதோ
தாபத்தில் விழுந்து மூன்றுநாள்கழித்து
வெள்ளையாய் உப்பி மிதந்து எடுத்துப்
போட்டகதை துயரம் மாளாது.கீழத்தெரு
விலிருந்து ஒரு வாளி தண்ணீர் எடுத்த
தற்காக நடந்த கலவரம் பிரசித்தம்.உச்சி
வெயிலில் இரண்டு தென்னைகளின்
நிழல் ததும்பும் நீரில் புதிய சித்திரங்கள்
போட்டுக்காட்டியிருக்கலாம்.
மேன்மைகளும் கயமைகளுமாய் நம்போ
லவே வாழ்ந்த கிணறு நம்போல இறந்து
போகவில்லை என்பது மட்டும் புரிகிறது.
இன்றும் அழகுமொழியில் ஏதோ சொல்
லிக்கொண்டுதான் இருக்கிறது. அதன்
மொழி புரிந்தோர் இலர்.
“கிணற்றில் விழுந்த நிலவைக் கீழிறங்கி
த்தூக்கிவிடு”என்பார் கவி எஸ்.வைதீஸ்
வரன்.”நனைந்த அவள் உடலை நழுவா
மல் தூக்கிவிடு/மணக்கும் அவள் உடலை
மணல்மீது தோய விடு/நடுக்கும் ஒளியுட
லை நாணல் கொண்டு போர்த்திவிடு”
“”””””
மீள்*

நன்றி அழகியசிங்கர்