கலைக்கு அடங்காதவள்/ அனங்கன்

தீட்டியவண்ணம் அவள்போலில்லை….
வண்ணங்களுக்கு அகப்படாத
வனப்பல்லவாஅவள்…

முற்றுப்பெறாத திரும்பிய அவள்ஓவியமே ஒரு
காவியத்திற்கான ஊற்றுக்கண் என்றால் அவளைப்பற்றி மேலும் என்ன
சொல்ல…

அவள்கண்ணைப்பார்த்த உடனே எனக்கு எல்லா வண்ணங்களுமே வெண்மைபூசித் தெரிந்தபிறகு அவள் முகத்தை நான் எங்ஙனம் தீட்ட…?

ஒரு கவிதையை ஓவியமாக்கவோ…
ஒரு ஓவியத்தை கவிதையாக்கவோ…
அவள் வடிவமைந்து நிற்கிறாள்…அழகாய்.

பன்முகக்கலைஞனாய் நான்மாற… எல்லாம்
அவளால்தான் என்றால் பொறாமைப்படாதீர்கள்.