
இரைத்து விட்டத்
தானியத்தை
கொத்திப் பறக்கும் வேளையில்
என்னையும் அழைத்துக்கொண்டு
பறக்கிறது அப்பறவை…
சிறுவட்டம் அடித்துவிட்டு
இறக்கிவிடுகிறது…
மீண்டும் ,மீண்டும்
இதையே செய்துக்கொண்டிருக்கும்
அப்பறவைக்கு
தானியத்தோடு என்னையும் தூக்கிச்செல்வது தெரிந்திருக்குமோ தெரிந்திருக்காதோ…
தானியம் தீரும்வரையிலும்
நானும் பறவையாய் ஜனித்து மனிதனாய் மாறும் விளையாட்டை
ரசித்தப்படி…
மெல்ல,மெல்ல
நீலவானம் நுழைகிறது அந்திக்குள்.

அட்டகாசம்.