இனிக்கும் தமிழ் -12 8/டி வி ராதாகிருஷ்ணன்

முட்டாளை பெரிய ஆள் என்று போற்றுவதும், அதைக் கேட்ட அந்த முட்டாள், நம்மை
விட பெரிய புத்திசாலி இந்த ஈரேழு பதினாலு உலகிலும் கிடையாது என்று
நினைப்பதும், நாளும் நடப்பது தானே….

இதை..கழுதையையும், பேயையும் வைத்து நயம்படச் சொல்கீறதி இச்செய்யுள்.

பாடல்

கழுதை காவெனக் கண்டுநின் றாடிய வலகை

தொழுது மீண்டுமக் கழுதையைத் துதித்திட வதுதான்

பழுதி லாநமக் கார்நிக ராமெனப் பகர்தல்

முழுது மூடரை மூளர்கொண் டாடிய முறைபோல்

பொருள்

கழுதை  = கழுதை

‘கா’ வெனக் = காள் காள் என்று பாடியதைக்

கண்டு  = கண்டு

நின் றாடிய = நின்று, அந்தப் பாட்டுக்கு ஆடிய

வலகை = பேய்

தொழுது = அந்தக் கழுதையை தொழுது

மீண்டும் = மீண்டும்

அக் கழுதையைத் = அந்தக் கழுதையை

துதித்திட = போற்றிட

அதுதான் = அந்தக் கழுதையும் தான்

பழுதி லா = குற்றமில்லாத

நமக் கார் = நமக்கு யார்

நிக ராமெனப் = நிகராம் என

பகர்தல் = சொல்லி

முழுது மூடரை = முழு முட்டாளை

மூளர்கொண் டாடிய முறைபோல் = முட்டாள் கொண்டாடியது போல

சங்கீதம்னா என்ன என்று கழுதைக்கும் தெரியாது, பேய்க்கும் தெரியாது.

நாட்டுக்குள்ள நிறைய பேய்கள், பல கழுதைகளை பாராட்டிக் கொண்டு இருக்கின்றன.

இத்தனை பேய்கள் பாராட்டுகிறதே, அது தப்பாவா இருக்கும் என்று
மற்றவர்களுக்கும் ஒரு சந்தேகம் வரத் தான் செய்யும்.

எத்தனை பேர் பாராட்டுகிறார்கள் என்பதல்ல முக்கியம்.

பாராட்டுபவனுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று பார்க்க வேண்டும்.

ஒரு முட்டாளை இன்னொரு முட்டாள் பாராட்டினால் பாராட்டி விட்டுப்
போகட்டும். நமக்கு அதனால் எந்த நஷ்டமும் இல்லை

                       – டி வி ராதாகிருஷ்ணன்
இதை பிரசுரிக்க வேண்டாம்..ஏற்கனவே போட்டாகிவிட்டது.
மன்னிக்கவும்Show quoted textஇனிக்கும் தமிழ்- 128
——————————-

கம்பனின் சுய சோகம் (தனிப்பாடல்)

கம்பனின் மகன் அம்பிகாபதி இறந்து போனான்.

கம்பனுக்கு சோகம் தாளவில்லை.

தன் நண்பன் ஓட்டகூத்தனிடம் சொல்வான்….

“மகன் கானகம் போன துக்கம் கூடத் தாளாமல் தசரதன் உயிர் விட்டான். நான் என்
மகன் இறந்த பின் கூட இன்னும் உயிரோடு இருக்கிறேனே…நான் எவ்வளவு கல்
நெஞ்சக்காரன்” என்று தன்னை தானே நொந்து கொள்கிறான்.

பரப்போத ஞாலம் ஒருதம்பி ஆளப் பனிமதியம்
துரப்போன் ஒருதம்பி பின் தொடரத் தானும் துணைவியுடன்
வரப்போன மைந்தர்க்குத் தாதை பொறாது உயிர்மாய்ந்தனன் நெஞ்சு
உரப்போ எனக்கு இங்கு இனி யாருவமை உரைப்பதற்கே?

பரப்போத = பரந்து விரிந்த ;போத (விரிந்த, கிளைத்த)

ஞாலம் = இந்த உலகம் எல்லாம்

ஒருதம்பி ஆளப் = ஒரு தம்பி ஆள (பரதன் ஆள)

பனிமதியம் = வெண் கொற்றக் குடை

துரப்போன் = துறந்தவன்

ஒருதம்பி = மற்றொரு தம்பி (இலக்குவன்)

பின் தொடரத் = பின் தொடர்ந்து வர

தானும் = தானும்

துணைவியுடன் = துணைவியான சீதையுடன்

வரப்போன = கானகம் போன

மைந்தர்க்குத் = பிள்ளைகளுக்காக

தாதை பொறாது = தந்தை (மனம் பொறுக்காமல்)

உயிர்மாய்ந்தனன் = உயிர் விட்டான்

நெஞ்சு = என் மனம்

உரப்போ = கடினமோ?

எனக்கு இங்கு = எனக்கு இங்கு

இனி = இனி

யாருவமை = யார் உவமை (உதாரணம்)

உரைப்பதற்கே? = சொல்வதற்கு