தமிழ் இலக்கணம் கற்போம் – பேராசிரியர் கஸ்தூரி

எச்சம்

சொல் நான்கு வகைப்படும். பெயர், வினை, இடை, உரி என்பன. இவற்றுள் பெயரும் வினையும் முதன்மையானவை. இடை, உரிச் சொற்கள் அதற்கு துணையான நிலையில் வந்தமையும்.

பெயர் சொல் என்பது ஆங்கிலத்தில் ‘Noun’ என்று குறிப்பிடப்படும். இங்கு ‘வினைச்சொல்’ குறித்து அதாவது ‘Verb’ என்றழைக்கப்படும் ‘செயலை’ குறித்துக் காண்போம்.

வினைச்சொல்:
ஒரு செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும். இந்த வினைச்சொல்லானது முற்று பெற்றது, முற்று பெறாதது என்று இருவகைப்படும். அதாவது, வினைமுற்று, எச்சவினை என வகைப்படும்.

ஒரு செயலானது முற்று பெற்ற வடிவமாக இருந்தால் அதனை வினைமுற்று என்று குறிப்பிடுவோம்.

(எ.கா) நடந்தான், வந்தான், வருவான், நடக்கின்றான்.

வினைமுற்று சொற்களில் செயல் முடிந்த நிலையில் காலம், பால், திணை போன்றவை வெளிப்படையாகத் தெரியும்.

                                                                              தொடரும்...

நன்றி : முகநூலில் சந்தியா பதிப்பகம்