
இடைக்கு ஆதாரம் இல்லை
நளவெண்பாவில் தமயந்தியைத் தன் நாட்டிற்கு அழைத்து வரும் நளன் வழியில் பல காட்சிகளை அவளுக்குக் காட்டுகிறான். அதில் ஒன்று இன்று நாம் பார்ப்பது.
காதலன் தன் காதலிக்காக மலர் கொய்து வருகிறான். அவற்றை அவள் தலையில் சூட்ட விழைந்தவன் அவளுடைய மெல்லிய இடை பூவின் எடையைத் தாங்காது என எண்ணி அவளுடைய பாதத்தில் அம்மலர்களை வைத்து விடுகிறான்.
“அனிச்சப்பூக் கால்களையாள்
பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை”
என்ற திருக்குறளை வித்தாகக் கொண்டு எழுந்த நளவெண்பாப் பாடல் இது.
“கொய்த மலரைக்
கொடுங்கையி னாலணைத்து
மொய்குழலிற் சூட்டுவான்
முன்வந்து – தையலாள்
பாதார விந்தத்தே
சூட்டினான் பாவையிடைக்
காதார மில்லா
தறிந்து.”
