ஃப்ரிடா காலோ கவிதை

தமிழில் : க.மோகனரங்கன்

“நான்
உன்னுடைய இல்லமாக,
உன் அன்னையாக,
உன் நேசமாக ,
இந்த பூமியின்
வீதிகளில் பயணிக்கும்
உனது கால்களின் பாதமாக இருப்பேன்.
உன் இரத்தத்தின் வெம்மையாக,
நீ அஞ்சும்போது
உனக்கு ஆறுதலாக,
வலியிலிருந்தும் துன்பத்திலிருந்தும்
உனது விடுதலையாக ,
பிறக்கவிருக்கும் அல்லது
பிறவாமலே போகுமுன் குழந்தைகளின் தாயாக
இருப்பேன்.”