
- ஒரே ஒரு சொல்
வேண்டும்
கவிதை எழுத - ஒரு சொல்லை
எதிர்பார்த்து
காத்துக் கொண்டிருக்கிறேன் - நான் எதிர்பார்ப்பது
மந்திரச் சொல்லா
வெறும் சொல்லா - சில சமயம் பேத்தலாக
சில சொற்கள் கவிதைக்குள் நுழைந்து விடும். - நான் எழுதுவதற்கு முன் பலர் சொற்களை வைத்துக்கொண்டு
கவிதைகள்
எழுதி விட்டார்கள்

ஒரு சொல்லிற்காக பலசொற்கள்
வீணாகிறதே ….