கத்தி/ஸ்பானிய கவிதை/சித்துராஜ் பொன்ராஜ்

  • ஹோர்கே லூயிஸ் போர்ஹெஸ் சிஎனது மொழிபெயர்ப்பு]

கத்தி மேசையின் இழுப்பறையில் கிடக்கிறது.

போன நூற்றாண்டின் இறுதியில் அது தோலேதோ நகரத்தில் உருவாக்கப்பட்டது. லூயிஸ் மெலியான் லாஃபினூர் என்பவன் அதை என் தந்தைக்கு கொடுத்தான். என் தந்தை அதை உருகுவாயிலிருந்து இங்கு கொண்டு வந்தார். எவாரிஸ்டோ காரியேகோ அதை ஒரு காலத்தில் பயன்படுத்தினான்.

கத்தியைப் பார்ப்பவர்கள், அதைக் கொஞ்ச காலமாகவே தேடிக் கொண்டிருப்பவர்களைப் போல் அதனோடு தவிர்க்க முடியாமல் விளையாடுவார்கள்.

கை, கத்தியின் கைப்பிடியை ஆர்வத்தோடு பிடித்துக்கொள்கிறது. எதையும் செய்யாமல் சும்மா கிடக்கும் ஆற்றல் மிகுந்த கத்தியின் வெட்டும் பகுதி உறைக்குள் கஷ்டமில்லாமல் நுழைகிறது.

கத்தியோ வேறொன்றைத் தேடியபடி இருக்கிறது.

கத்தி வெறும் இரும்புப் பொருளாக மட்டுமில்லாமல் அதையும் தாண்டி வேறொன்றாக இருக்கிறது.

மிகத் துல்லியமான ஒரு காரணத்துக்காக மனிதர்கள் அதைச் சிந்தித்து உருவாக்கி இருக்கிறார்கள்.

காலத்தையும் மீறிய ஏதோ ஒரு வகையில், இதே கத்திதான் நேற்றிரவு தாகுவாரெம்போ பகுதியில் ஒரு மனிதனைக் கொன்றது. இதே போன்ற கத்திகள்தான் சீஸரைச் சாகடித்தன.

கொல்வதும் ரத்தத்தை முன்னெச்சரிக்கையே இல்லாமல் சிந்த வைப்பதும்தான் கத்திகளின் நோக்கம்.

மேசையின் இழுப்பறையில், பழைய தாள்களுக்கும் கடிதங்களுக்கும் நடுவில் இருந்தபடியே,

கத்தி ஓய்வு ஒழிச்சலே இல்லாமல் தனது எளிமையான புலிக் கனவைக் காண்கிறது.

அதைத் தொடும் ஒவ்வொருவனிடமும் தனக்குரிய கொலைகாரனை உணர்ந்து கொள்கிறான். கத்தியின் இரும்பு உயிர்ப்புடன் இருப்பதால் அதை இறுகப் பிடித்துக் கொள்ளும் கையும் உயிர்ப்புடையதாய் மாறுகிறது.

சில நேரங்களில் அத்தனை ஆற்றலும், அத்தனை உறுதியும், அத்தனை வைராக்கியமும், அத்தனை தூய்மையான திமிரும் நிறைந்திருக்கும் இந்தக் கத்தி

என்னைப் பரிதாபப்பட வைக்கிறது –

ஆனாலும் வருஷங்கள் போகின்றன

வீணாக.

El puñal

En un cajón hay un puñal.

Fue forjado en Toledo, a fines del siglo pasado; Luis Melián Lafinur se lo dio a mi padre, que lo trago de Uruguay; Evaristo Carriego lo tuvo alguna vez en la mano.

Quienes lo ven tienen que jugar un rato con él; se advierte qué Haze mucho que lo buscaban; llama no se apresura a apretar la empuñadura que la espera; la hoja obediente hipotenusa juega con precisión en la vaina.

Otra cosa quiere el puñal.

Es más que una estructura hecha de metales; hombres lo pensaron y lo formaron para un fin muy preciso; es, de algún modo, eterno, el puñal que anoche mató a un hombre en Tacuarembó y los puñales que mataron a César. Quiere matar, quiere derramar brusca sangre.

En un cajón del escritorio, entre borradores y cartas, interminablemente sueño el puñal su sencillo sueño de tigre, y la mano se anima cuando lo rige porque el metal se anima, el metal que es presiente en cada contacto al homicida para quien lo crearon los hombres.

A veces me da lástima. Tanta dureza, tante fe, tan impasible o inocente soberbia, y los años pasan, inútiles.