காதலிக்க_நேரமில்லை” படத்தை ரீமேக் செய்யப் போகிறேன்..”/ராம்

இயக்குனர் ஸ்ரீதர் உயிரோடு இருந்த காலத்தில் அவரிடம் போய் இப்படிக் கேட்டிருக்கிறார் புதிய இயக்குனர் ஒருவர்!

கொஞ்சம் யோசித்த ஸ்ரீதர் , “ஹீரோவாக யாரை போடப் போகிறாய்?”என்று கேட்க …
முத்துராமன் கேரக்டருக்கு ஒரு இளம் ஹீரோவையும் , ரவிச்சந்திரன் கேரக்டருக்கு இன்னொரு இளம் ஹீரோவின் பெயரையும் சொல்லி இருக்கிறார் , உரிமையை வாங்க வந்த இயக்குனர்…!

பொறுமை இழந்த ஸ்ரீதர் “நான் கேக்குறது ஹீரோவா யாரை போடப் போறேன்னுதான்..” என்று கேட்டிருக்கிறார்!

வந்தவருக்கு நிஜமாகவே ஒன்றும் புரியவில்லையாம்..!!
அட…இதைப் படித்துக் கொண்டிருக்க
எனக்கே எதுவும் புரியவில்லை!
முத்துராமனும், ரவிச்சந்திரனும் தானே ,“காதலிக்க நேரமில்லை” ஹீரோக்கள் என்று எண்ணிக் கொண்டேன்!

ஆனால் ஸ்ரீதர் கேட்ட கேள்வி வித்தியாசமானது “காதலிக்க நேரமில்லை” படத்தோட டைட்டில் கார்டை கவனிச்சுப் பார்த்திருக்கியா?”

ரைட்ஸ் கேட்டு வந்தவர் ராங்காக முழிக்க , ஸ்ரீதர் சொன்னாராம் :
“காதலிக்க நேரமில்லை” படத்தோட டைட்டிலைப் பாரு… #டிஎஸ்பாலையா பேர்தான் முதல்ல வரும்….ஏன்னா அந்தப் படத்துக்கு அவர்தான் நிஜமான ஹீரோ…. பாலையா அளவுக்கு நடிக்கிறதுக்கு , இப்போ ஃபீல்டில இருக்கற யாராவது ஒரு ஆளை முதல்ல தேடிப் பிடிச்சுக் கொண்டுவா..அப்புறம் ரீமேக் ரைட்ஸ் தருகிறேன்”

பாலையா கேரக்டரைத் தேடிப் போனவர் போனவர்தான்! வரவே இல்லை!
ஸ்ரீதரும் போய் விட்டார்!

ஸ்ரீதர் அந்த இயக்குனரிடம் கேட்ட கேள்வியை , என்னிடம் நானே கேட்டுக் கொண்டேன் :

“காதலிக்க நேரமில்லை” படத்தோட டைட்டில் கார்டை கவனிச்சுப் பார்த்திருக்கியா?”

“இல்லை” என்று சொன்னது இதயம்..!

ஸ்ரீதர் சொன்னதை உறுதி செய்து கொள்ள உடனே ஓட விட்டேன் “காதலிக்க நேரமில்லை” படத்தை..!
ஸ்ரீதர் சொன்னது உண்மைதான் !

பாலையாவின் நடிப்பைப் பாராட்டுவது என்றால்
கொஞ்சம் பொறுங்க…!

நம்ம ஆட்களை நாம் பாராட்டுவதை விட, யாராவது அமெரிக்காக்காரரோ, ஆஸ்திரேலியாக்காரரோ புகழ்ந்தால்தானே, நமக்கு ஆனந்தமாக இருக்கும்!

எம்.ஜி.ஆர் , டி.எஸ்.பாலையா, என்.எஸ்.கிருஷ்ணன் இன்னும் பல நட்சத்திரங்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய, பிரபல அமெரிக்க இயக்குனர் எல்லீஸ் ஆர்.டங்கன் ஒருமுறைசொன்னாராம் :

“நோ ஒன் கேன் ரீபிளேஸ் பாலையா”

ஊட்டியை உறவு நம்பினார்க்கினிய சிவன்
மறக்கமுடியுமா?

என்னதான் முடிவு?
சிறப்பை மிஞ்சமுடியுமா? (பாவியெனை மறுபடியும் பிறக்க வைக்காதே)

மதுரை வீரன் வெள்ளிக்கிழமை கத்தி எடுக்கமாட்டேன்
சிரிக்காமல் இருக்க முடியுமா?

பாமா விஜயம் பொறுப்புள்ள தந்தையை
ரசிக்காமல் இருக்கமுடியுமா?

சொல்லிக்கொண்டே போகலாம்.

நினைவுகளை கிளறியதற்கு
பாராட்டுக்கள்.

Very true!! No one can replace him. ✍🏼

நன்றி ராம்.