பௌத்தம், ஜென், சூஃபி, நாஸ்டிசிசம், தாந்ரீகம், சித்தம்/கால சுப்ரமண்யம்

எனக்குப் பிடித்த புத்தகம் தர்மானந்த கோசம்பியின் பகவான் புத்தர். டிடி கோசம்பியின் தந்தை. சாகித்திய அகாதமெயில் காஸ்ரீஸ்ரீயின் நல்ல தமிழாக்கத்தில் கிடைக்கிறது. அது கிடைக்காத 90களில் என்னிடமிருந்ததை விடியல் சிவாவிடம் கொடுத்து வெளியிடச் சொன்னேன். (அரசு பதிப்பகம் என்பதால் பிரசுர பிரச்சனை இராது என்று) அவர் தயங்கி வைத்திருந்தவர், தலித் இலக்கிய எழுச்சிக்குப் பின் பௌத்தத்துக்கு மவுசும் மோஸ்தரும் வந்த பிறகு உடனே வெளியிட்டார். இப்போது இரண்டு மூன்று பதிப்புகளுக்கு மேல் அது வந்துவிட்டது. சாகித்ய அகதெமியும் இரண்டாம் பதிப்பை வெளியிட்டுள்ளது. மயிலை சீனியின் பௌத்தமும் தமிழும் முக்கியமான நூல்.

இன்று பௌத்தத்தின் சில நல்ல அம்சங்களை ஜென் (தியான) பௌத்தம் தான் தக்க வைத்துள்ளதாக நினைக்கிறேன். மற்றவை எல்லாம் சடங்குகளாகவும் நம்பிக்கைகளாகவும் தான் உள்ளன. ஜென்னை மேற்கத்தியவரை விட Suzuki போன்ற ஜப்பானியரே நன்றாகச் சொல்கிறார்கள் – (சூஃபி பற்றி தெரிந்துகொள்ள Idries Shah உதவுவதுபோல்) தம்மபதம், தீகநிகாயம் தமிழிலேயே கிடைக்கிறது. பத்மா பதிப்பகம் பல புத்த நூல்களை வெளியிட்டுள்ளது என்பதை புத்தகக் கண்காட்சியில் கண்டேன். Rhys Davids போன்றோரின் புகழ்பெற்ற புத்தகங்களை சாகித்ய அகாதெமியும் நேஷனல் புக் டிரஸ்டும் பப்ளிகேஷன் டிவிசனும் ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியிட்டிருக்கின்றன. என்னைக் கேட்டால் அம்பேத்கரின் புத்தரும் தம்மமும் தான் இருப்பதில் சிறந்தது என்பேன்..

(குட்டி ரேவதி பதிவில் இட்ட பின்னூட்டம்)

சூஃபி, நாஸ்டிசிசம், தாந்திரீகம், சித்தர் தத்துவம் பற்றியும் படிக்க வேண்டும். தாந்திரீகம் பற்றி நல்ல நூல்கள் உள்ளன. ஓசோ அறிமுகத்துக்குப் போதும். சோ.நா.கந்தசாமியின் நூலில் மூன்றாவது தொகுதியில் சித்தர் தத்துவ அறிமுகம் உள்ளது. இவை அறிமுகமாக உதவும் நூல்கள். இவற்றுள் நுழைய வேண்டும். பத்ம வியூகம். லேபிரிந்த், வெளியேறும் வித்தை தெரிந்தால் தான் உள்ளே புகவேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேல் ஜே.கிருஷ்ணமூர்த்தி…