
India is our playground, the playground of Masters, the custodians of the divine plan.
It will never be divided or taken away from us. Believe me, my friend. Truth shall have its way. Truth shall stand
O
பாரத தேசம் ஞானிகளின் விளையாட்டுக் களம் ! இந்த தேசத்தை அவர்களே பாதுகாக்கிறார்கள் … இதை யாரும் பிளந்து விட முடியாது ! மெய்மையின் பாதை தனித்வமானது ! மெய்மையே வெல்லும்!
O
யோகி தேச எல்லைகளை கடந்து…
இந்த பூமிக்கும் அப்பால்
தந்தையின் பிரபஞ்சப் பணியில்
தம்மை கரைத்துக் கொண்டவர்
0
அதே நேரத்தில் பாரத தேசத்தின் ஆன்மிக மரபின் மீதும்
ஞானிகளின் மீதும்
ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்
0
பஞ்சபூதங்களையும் கட்டுப்படுத்தும்
ஆற்றல் மிக்க ஞானிகள்
இந்த பாரத தேசத்தை காத்து நிற்கிறார்கள்
என்ற தேவரகசியத்தை வெளிப்படுத்தினார் யோகி!
0
பாரத தேசத்தின் ஞானமரபு
அத்தகையது.
வாழையடி வாழையாக வந்த
திருக்கூட்ட மரபிது
0
மெய்மையே வென்று நிற்கும்
அதன் பாதை தனித்வமானது
போலித்தனங்கள் உதிர்ந்து விடும்
மெய்யொன்றே சோதனைகளிலும்
சொக்கத் தங்கமாகச் சுடர்விடும்
0
சில நேரங்களில் உலக நிகழ்வுகள் நமக்கு அதிர்ச்சியைத் தரும்
அவநம்பிக்கையை ஏற்படுத்தும்..
அந்த கணங்களில்
யோகியின் இந்த வாக்கை நினைவு கூர்வோம் ..
0
இங்கு நிகழ்பவை யாவும் தந்தையின் அருளால்தான். The custodians of the Divine plan will take care…
நம் அறிவால் அளக்க முடியாத
அலகிலா விளையாட்டிது
0
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜயகுரு ராயா
O
மீள் பதிவு – 13/3/2018
