
“மிளகுக்கொடிகளில் துளிர்களைக் கொத்தும் கொக்குகள்,
மாதுளம்பழங்கள் குழந்தை யானைகளின் கால்களில் நசுங்கி
பெண்களின் கன்னம் போல சிவந்திருக்கும் காட்டு நிலம்” என இரு வன வருணனை வரிகள் இன்று எழுதினேன். எங்கே பார்த்தேன் இவற்றை என்று மறந்துவிட்டது. காலையிலிருந்து அலைக்கழிப்பாய் இருந்தது சற்று முன்புதான் கேரளத்தில் முன்னார் பகுதியில் (இடுக்கி?) இக்காட்சிகளைப் பார்த்தது என நினைவுக்கு வந்தது. இப்போது கவிதை முடியும்போதுதான் இந்த வரிகளை வைத்திருப்பேனா நீக்கிவிடுவேனா என்று தெரியும்.
