
வந்த பிறகு தோன்றுகிறது
வந்திருக்க வேண்டாமோ என்று:
போனபிறகு தோன்றுகிறது
போயிருக்க வேண்டாமோ என்று:
உண்டபிறகு தோன்றுகிறது
உண்டிருக்க வேண்டாமோ என்று;
கண்டபிறகு தோன்றுகிறது
கண்டிருக்க வேண்டாமோ என்று;
பேசியபிறகு தோன்றுகிறது
பேசியிருக்க வேண்டாமோ என்று;
இந்தப் பதிவைப் பற்றி மட்டும்
அப்படி எதுவும் தோன்றவில்லை.


சமத்காரத்தின் மறுபெயர் வாவேசு வா?