
வண்ணச்சரபம் தண்டபாணிசுவாமிகள்
அவர்கள் அவ்வளவாக ஆன்மிகவாதிக
ளால் கொண்டாடப்படுவதில்லை என்பது
சரியே.இங்கே ஆன்மீகவாதிகள் என்போ
ர் சும்மா ‘சாமிகும்பிடும்’வகையினர்தாம்.
ஞானம் தேங்கிவிடுகிறது.துதித்தல்- வே
ட்டல்தவிர வேறேதும் தெரியாதவர்கள்.
கடவுள்கொள்கையில் தமிழை முன் நிறு
த்தும் தவசீலர்கள் வைதிகத்திற்குத் தாழ்
நிலையிலேயே இறக்கிவைத்துப்பேசப்
படுவது வழக்கம்தான்.
தவத்திரு தண்டபாணிசுவாமிகள் திருநெ
ல்வேலிப்பக்கத்துக்காரர்.சிறந்தஆன்மிக
ப் பயணி.”குருபரத்துவம்” என்ற தன்வர
லாற்றைத்தானே எழுதி தன்செய்திகளை
அறிவித்தார்.மனிதமனங்களை நன்கு
படித்திருந்தார்.இவரது பன்முக ஆற்றல்
வழக்கம்போல் புனைகதைகளால் மெரு
கூட்டப்பட்டது.கவனித்தல் செம்மையாகு
ம்போது எண்ண ஓட்டங்களும் குறைய
ஆரம்பிக்கும்.ஆனால் சுவாமிகள் ஒரு பெ
ருமழையைப்போல் பொழியலானார்.ஒரு
கட்டத்தில் தன்னையே கடவுளின் தூத
னாக அல்லது தானே கடவுளாக அறிவிக்
கும் மரபில் நில்லாமல் நெறிப்படுத்தப்
பட்ட ஒருவாழ்க்கை முறையை வலியுறு
த்தினார்.ஆன்மிகம் வாழ்வு நெறிதான்
என எளியவர்க்குச் சொன்னார். சென்
னையில் இருந்தபோது கந்தகோட்டத்துக்
கந்தவேள் மீது பிள்ளைத்தமிழ் பாடினார்.
நூல் அரங்கேற்றம் என்பது அறிஞர் குழு
வினரின் ஒப்புதல்.அறிஞர்கள் வினா எழு
ப்புவர்.பதில் சொல்லவேண்டும்.”செக்கரு
ம் ஒஞ்சிய செம்மைநிறம் பெறு/சேயே
தாலேலோ”என்ற சுவாமிகளின் பாடல்
வரிகளின்மேல் அறிஞர் சபாபதி முதலி
யார் கேள்வி எழுப்பினார்.ஓஞ்சல் என்பது
கடுஞ்சொல்தானே என்ற கேள்விக்கு
பாண்டிநாட்டில் வழங்கும் வேண்சொல்
நாணுதல்தான் இங்கே ஓஞ்சல் என்றார்.
சப்பாணிப்பருவத்தில்வரும்’சென்னை
யில் வைகினை கொட்டுக சப்பாணி” என்
பதைச் சுட்டிக்காட்டி வைகி என்ற சொல்
லுக்கு உரிய சந்தம் யாது எனக் கேட்கப்
பட்டது.”தய்ய ‘என்ற சந்தமாகும்.மீனாட்சி
யம்மைப் பிள்ளைத்தமிழில் குமரகுருபரர்
“வைதிகப் பாட்டினர் என்று கூரியதைச்
சொல்லி’தய்யன’என்னும் சந்தத்தில் பாடி
னேன் என்றார்.சுவாமிகளின் எண்ணற்ற
நூல்களின் அரங்கேற்ற நிகழ்வுகள் சுவா
ரசியமானவை.ஒருலட்சம் தமிழ் இசைப்பாடல்களை இயற்றிய சுவா
மிகள் ஐம்பதாயிரம் பாடல்களைத்
தானே கிழித்தெறிந்ததாகச்சொல்வர்.
பழனி அடிவாரம் இவர் இருப்பிடமானது.
கௌமாரம் முக்கிய வழியானது.சுக்குக்
கு மிஞ்சிய மருந்தில்லை.சுப்பிரமணிய
னுக்கு மேலான தெய்வமில்லை’என்பது
இவரது கருத்தானது. பெருமைக்குரிய
பெயரிலேயே அன்று ஆன்றோர்களை
அழைப்பது வழக்கம். வெண்பாப்புலி,
கவிகுஞ்சரம்,சர்க்கரைப்புலவர் என்பது
மாதிரி தண்டபாணிசுவாமிகள் வண்ணச்
சரபம் என்றழைக்கப்பட்டார்.கௌமார
மரபை அறுசமய மரபிற்குள் கொண்டு
வரமுயன்றார்.வடலூர் வள்ளல்பெருமா
னொடு தொடர்புகொண்டார்.’உயிர்க்கொ
லையும் புலைப்புசிப்பும் உடையவர்கள்
எல்லாம்/கொன்றுதின்பார்க் கஞ்சிக் கு
லையோமோ? என்ற வள்ளலார் வாக்கை
ஏற்று”என்றும் இதயத் திரக்கமிலராய் உயிர்கள்/கொன்று தின்பார்க் கஞ்சிக் கு
லைவேனோ ‘,என்றார்.
தில்லைக்குச் சென்றபோது திருநடனத்
தானை வழிபட்டார்..எங்கள் தில்லைக்கூ
த்தனையும் பாடக்கூடாதா என்ற போது
சிதம்பரம் அப்பன் எனக்கு விரும்பிய
சிற்றுண்டியை அளித்தால் ஆயிரம் பாடல்
கள் பாடுகிறேன் என்றார். நிவேதனப்பிர
சாதம் கிடைக்க ‘தில்லைத் திருவாயிரம்”
பாடினார்.உணவை முதன்மைப்படுத்தி
னார்.சமயாதீதம் என்ற புதுவித சமயத்
தை ஏற்படுத்தினார்.ஆண்டிக்கோலம்,கை
யில் தண்டாயுதம்,தோள்களில் வடகலை
தென்கலை திருநாமம் எனக் காட்சிதந்து
அனைத்து நற்சமயங்களும் ஒன்றே என
அறிவித்தார்.ஆதித்ய ஹிருதயம்போல்
தமிழில் “ஞாயிறு ஆயிரம்” என்ற நூல்
இயற்றினார்.’அறுவகை இலக்கணம்’
‘வண்ணத்தியல்பு” இருநூல்களும் இ
சைத்தமிழுக்குசுவாமிகளின் கொடை.
ஆங்கிலேயர்களின் முறைகேடுகளைக்
கண்டித்து “ஆங்கிலியர் அந்தாதிபாடினா
ர்.பெண்கல்வி,மறுமணம்,கலப்புமணம்,
போன்றவற்றை ஆதரித்தார்.தமிழ்ச்சுவை
அறியாத் தெய்வம் உளதெனில்/அஃது
ணர் அலகையில் தாழ்வென அறமே ‘
என்றார்.கெடல் எங்கே தமிழின் நலம்/
அங்கெலாம் தவையிட்டு /கிளர்ச்சி செய்
க ‘என்றார்.
வண்ணச்சரபம் தண்டபாணிசுவாமிகள்
வைதிகத்தை மறுத்தார்.தமிழை முன்னே வைத்தார்.கலகம் செய்யும் துறவியாக
இருந்தார்.அதனால் ஆன்மிகம் அன்னா
ரைக் கண்டுகொள்ளவில்லை. மொழி
யை மிகமிக எளிமையாகக் கையாண்
டார்.அதனால் தமிழறிஞர்களும் அவரை
ச் சற்றுதள்ளியே வைத்தனர் என்பதில்
உண்மை இருக்கலாம்.
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் ஒரு சகாப்தம்.


ஸ்ரீ வண்ணச்சரபம் சுவாமிகளைக் குறித்த பதிவு மன நிறைவைத் தந்தது. மகான்களின் வாழ்வை அளப்பது மிக அரிது. அறிந்ததை உணர்வதே உத்தமம்.