அக்காவும் ஐயனார்கோயில் — குதிரையும்/நாகேந்திர.விச்வநாதன்

மேற்றிசையில் அக்கா
அழுதுகரைகிறாள்!
எதன்பொருட்டோ?

துக்கத்திற்குத் தொலைவு
பொருட்டன்று
ஐயனார் கோயில்
குதிரைநிழல்
அவ்வப்போதான
குளுமை,
ஆறுதல்
பிடித்தமானதும்கூட.

அவன் கேட்காமலே
ஏழெட்டு முனிகள்,
சடையாண்டிச் சாமி,
பச்சைவாழியம்மன்
உயிர்பெற்று வந்து
காவலிருக்கும்‌.

ஏதாவது வரம்
கேட்டால்
வழங்கிடவும் உத்தேசம்.

குவியலாய்ச் சருகுகள்-
நீண்டநாள் யாரும்
வராத அடையாளம்

எல்லாமே பத்திரம்
சொல்லின.
பக்கத்துக்குளம்
அல்லிவாசத்தைவீசி
ரம்மியப்படுத்த
முயன்றது.

அக்கா காணாமல்
போனபோது
ஊரே தூற்றியதில்
காற்றும்
மாசடைந்து திணறியது.

அக்கா
அழுதுகரைகிறாள்
மேற்கேயிருந்து.

ஐயனார் கோயில்
குதிரையும்
அதன் நிழலும்
இல்லாமல் போனபின்
அக்காவின் சுவடும்
குரலும்

அவற்றில்

போயகருந்தன.

One Comment on “அக்காவும் ஐயனார்கோயில் — குதிரையும்/நாகேந்திர.விச்வநாதன்”

  1. உரைநடையின் சாயல் அதிகம்.இறுதிவரியில் தட்டச்சுப் பிழையோ? போயகருந்தன புரியவில்லை.பத்திரம் சொல்லாட்சி இடறுகிறது

Comments are closed.