இனிக்கும் தமிழ்- 131 / டி வி ராதாகிருஷ்ணன்

பெரிய புராணம் – ஆற்றின் நீரோட்டம்

பெரிய புராணம் போன்ற மிகப் பெரிய இலக்கியத்தை எழுத ஆரம்பித்த சேக்கிழார்,
ஆற்றின் நீரோட்டத்தை, நின்று, இரசித்து, அனுபவித்து எழுதுகிறார்.

ஆற்றின் நீரோட்டம் கலங்கலாக இருக்கிறது. ஏன் கலங்கி இருக்கிறது என்றால்,
பெண்கள் ஆற்றில் நீராடுவார்கள், அவர்கள் உடலில் உள்ள சந்தனம், குங்குமம்
போன்றவை நீரில் கலந்ததால் அந்த நீர் தெளிவு இல்லாமல் இருக்கிறதாம்.

பாடல்

வாச நீர்குடை மங்கையர் கொங்கையிற்

பூசு கும்கும மும்புனை சாந்தமும்

விசு தெண்டிரை மீதழித் தோடுநீர்

தேசு டைத்தெனி னுந்தெளி வில்லதே.

பொருள்

வாச நீர் = வாசம் உள்ள நீர்

குடை = குடைந்து குடைந்து நீராடும்

மங்கையர் = பெண்கள்

கொங்கையிற்  = மார்பில்

பூசு  = பூசிய

கும்கும மும் = குங்குமமும்

புனை சாந்தமும் = அணிந்த சந்தனமும்

விசு = வீசி

தெண்டிரை =  அலையால்

மீதழித் தோடுநீர் = மிகையாக அழித்துக் கொண்டு ஓடும் நீர்

தேசு = ஒளி

உடைத்தெனி னுந்  = பொருந்தியதாயினும்

தெளி வில்லதே. = தெளிவு இல்லாமல் கலங்கி இருந்தது

சரி, இதில் என்ன இருக்கிறது ? பெண்கள் குளிக்கிறார்கள். சந்தனமும்,
குங்குமமும் நீரில் கலந்து இருக்கிறது. நீர் தெளிவாக இல்லை.  இதெல்லாம்
தெரிந்து என்ன ஆகப் போகிறது?

இயற்கையை இரசிக்க தெரிந்து கொள்ள வேண்டும். எப்படி இரசித்து
இருக்கிரார்கள் என்று தெரிந்து கொள்ளலாம். அட, இதை இப்படியும் இரசிக்க
முடியுமா என்று வியக்க வைக்கிறது.

                 

One Comment on “இனிக்கும் தமிழ்- 131 / டி வி ராதாகிருஷ்ணன்”

  1. இதில் இயற்கையே இல்லை. பிற மங்கையர் பூசியகுங்குமம், சந்தனம் போன்றவை தன் மேனியில் பட்டதால் ஆறு மனம் கலங்கியது

Comments are closed.