மிதக்கும் கடவுள்/தங்கேஸ்

பட்டாம் பூச்சியாக படபடத்து உள்ளங்கையில் வந்து அமர்கிறது அது

மனது விடைபெறாமலே ஒரு காத தூரம் போய் விட்டது கழன்று 

நெகிழ்ச்சிக்கு ஒரு மழைத்துளி கூட தலை மீது விழவில்லை என்றாலும்

உச்சி முகர்ந்து ஆசீர்வதிக்கும்

ஒரே ஒரு செம்பருத்தி இலை போதும்

தரையில் இறக்கி விட மனதின்றி

உள்ளங்கையில் ஏந்தி நிற்கிறேன்

கோவில் தூணில் அசையாது நிற்கும் யாழியானேன் சற்று நேரத்தில்

சற்று நேரம் என்பதுயுகம் யுகங்களாகிறது

ஒரே ஒரு சருகுக்காக நின்று புறப்படும்

காலத்தைப் பார்க்கும் போது தான்

மிதக்கும் கடவுளிடம் கொஞ்சம் சிநேகம்

காட்டத் தோன்றுகிறது

2 Comments on “மிதக்கும் கடவுள்/தங்கேஸ்”

Comments are closed.