
தாராதேவி வழிபாடு எந்த இந்திய மரபில் தோன்றியது என்று பார்த்தால், தாந்திரீக, வாமமார்க்க, சாக்த மூலங்களுக்குத் தான் செல்லவேண்டும். வைதீக, சமண, பௌத்த புராணங்களில் வழி, கொற்றவை, துர்க்கை, சக்தி,, உமா, ஈஸ்வரி, தாரா என்று பின்பு சீன ஜப்பானிய இந்தோனேசிய மரபுகளும் கலந்துள்ளன. சக்தி வழிபாடு பௌத்தத்துள் நுழைந்திருக்கலாம். (தமிழகத்தில் உள்ள மாரியம்மன் கோயில்கள் எல்லாம் தாராதேவியிலிருந்து மாறியவை என்று மயிலை சீனி வேங்கடசாமி [பௌத்தமும் தமிழும்] கூறுகிறார்.)
புராதன பௌத்தத்தில் பெண் தெய்வங்கள் முதல்-இரண்டாம் நூற்றாண்டுகளில் மகாயானத்தின் செல்வாக்கில், திபெத்திய வஜ்ராயன தாந்திரீக பௌத்தத்தில் தாரா போன்ற பெண்தெய்வங்கள் பிரசித்தம். பிறப்பிக்கப்பட்டன எனலாம். முதல்-இரண்டாம் நூற்றாண்டுகளில் பெண் தெய்வங்கள் பௌத்த சமயத்துள் நுழைந்திருக்கலாம். பழைய நூலான பிரஜ்னபாரமித சூத்திரத்தில் பிரஜ்னபாரமிதா என்ற பெண் தெய்வம் குறிக்கப்படுகிறது. இந்நூல் வடமொழியிலிருந்து இருந்து பொ,நூ. இரண்டில் சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, அதன் வழி இத்தகவல் கிடைக்கிறது.. பௌத்த சங்கத்தில் பின்பே பெண்கள் பிட்சுணிகளானது போல் பௌத்தத்தின் பிற்காலத்திலேயே பிரஜ்னபாரமிதா உருவ நிர்ணயம் பெற்ற தாராதேவியின் கல் சிலை வடிவம் (பொ,நூ 7) எல்லோரா குகை (எண் 6) யில் காண வாய்க்கின்றது. நான்காம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தைச் சேர்ந்த மார்க்கண்டேய புராணத்தின் தேவி மகாத்மியத்தில் தான் துர்கை மாதிரியான பெண் தெய்வங்கள் வருகிறார்கள். மார்க்கண்டேய புராணம் நான்காம் நூற்றாண்டின் இறுதியில் இயற்றப்பட்டிருக்கலாம் என்று வல்லுனர்கள் கருதுகிறார்கள். தாந்த்ரீக பௌத்தம் பிரசித்தமான காலத்தில் “சகல பௌத்தர்களுக்கும் அன்னை”என்று தாரை வழிபாடப்பட்டாள். தேவி மகாத்மியத்தின் பௌத்த வாம மார்க்கம். புத்தர், போதிசத்துவ வழிபாடுகளுக்கு இணையாக திபெத்திய, நேபாள, மங்கோலிய, பூட்டான் பிராந்தியங்களில் தாரா வழிபாடப்படுகிறாள். அவளும் ஒரு போதிசத்துவர் தான். உலகெங்குமுள்ள பௌத்த சமய கலாச்சார சமூகங்களில் தாரை இன்றும் வழிபடப்படுகிறாள். பசுமை நிறத் தாராவும் வெண்ணிறத் தாராவும் மிகப் பிரபலம். பயத்தை நீக்கி அபயகஸ்தம் காட்டுகிறாள் பசுந்தாரா. தீர்காயுளைத் தரும் தெய்வமாக வெண் தாரா விளங்குகிறாள். எட்டு மகாபயங்களைப் போக்குபவள் தாரா. பிரஜ்னபாரமிதா வழிபாடு திபெத்திய பௌத்தத்தில்இன்றுமுள்ளது. திபெத்திய வஜ்ராயன பௌத்தத்தில் ”ஷெராப்க்யி ஃபாரொல்டுசின்மா” என்று அவள் வழங்கப்படுகிறாள். ‘ஓம் ஆஹ் திஹ் ஹம் ஸ்வா’ என்ற மந்திரத்தால் அவள் வழிபடப்படுகிறாள்.
தாராவின் ஒரு பெயர் “துர்கோத்தரி நித்தரா”.. ஐந்தாம் நூற்றாண்டு மகாபாரதத்தில் வரும் துர்க்கா ஸ்தோத்திரத்தில், துர்க்கை “தாரிணி” (கடக்கச் செய்பவள்) எனப்படுகிறாள். “தாரிணி/கடக்கச் செய்பவள்” என்று பொருள். தாரா என்ற பெயரின் அர்த்தமும் அதுபோன்றதே. தாராதேவியின் 108 நாமங்களில் 44 நாமங்கள் துர்க்கைக்கும் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் 12ஆம் நூற்றாண்டு வரைக்கும் கூட தாராதேவி வழிபாடு பிரசித்தமாயிருந்துள்ளது. திபெத், மங்கோலியாவில் தாராதேவி வழிபாடு இன்றும் தொடர்கிறது.
தாராவின் போதிசத்துவத் தோற்றத்தைப் பற்றிய பௌத்த தொன்மங்கள் பல. லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர், துவித லோகத்தில் யேஷே தாவா என்ற ராஜகுமாரி ஒருத்தி வசித்து வந்தாள். யுகயுகாந்திரமாக அங்கு வாழ்ந்துவந்த தோன்யோ த்ரூபா. என்ற போதிசத்துவர் ஒருவருக்கு அவள் பிட்சை அளித்துவந்தாள்.. அவளுக்கு அவர், போதிசத்துவ மனோஹிருதயம் குறித்த மேலான போதனையைத் தருகிறார் த்ரூபா அளிக்கிறார், போதனையருள் பெற்ற இளவரசியை துறவிகள் சிலர் அணுகி, அவள் அடைந்த பேற்றினைப் பலனாக்கி அடுத்த பிறவியில் ஆணாகப் பிறக்கும் பிரார்த்தனை செய்யும்படியும் ஆன்மசாதனையின் அடுத்த நிலைகளை அவள் அப்போதுதான் அடைய முடியும் என்றும் ஆலோசனை வழங்கினார்கள். பலகீன சிந்தனை கொண்ட மானிடரே, போதிஞானத்தை அடைய ஆண்பெண் பேதத்தை ஒரு இடையூறாகக் கருதுவார்கள் என்று கூறி, அவர்களை மறுதளித்து, பெண்மைரூபத்தில் உயிர்களுக்குப் பணிசெய்ய விரும்புவோர் அதிகமில்லை என்று நினைத்து வருந்தி, எல்லாப் பிறவிகளிலும் பெண்ணாகவே பிறக்க உறுதி பூண்டு, பெண்ணாகவே அவலோகித போதிசத்துவ நிலையை அடையும் லட்சியம் கொண்டு, பதினாயிரம் ஆண்டுகள் அவள் தியானத்தில் ஆழ்கிறாள். அவளது தியானயோகம் பல உயிர்களை சம்சாரசாகரத்தில் இருந்து விடுதலை செய்கிறது. இதை அறிந்த த்ரூபா “இனி வரும் உலகத் உலக உற்பவங்களின் போதும், தனித்துயர்ந்த போதியின் அடையாளமாக, பெண் தெய்வமான தாராவாக நீ நிரந்தரம் பெறவாய்” என்று ஆசி வழங்கினார்.
இது போன்றே இக்கதைக்குப் பல மாற்று வடிவங்கள் உண்டு. அமிதாப புத்தரின் கண்களில் ஒளிர்ந்த நீலக் கதிர்களிலிருந்து தாரா தோன்றினாள் என்றும் ஒரு வழக்கு.
திபெத்திய ஞானசந்திரா கதையை தாரநாதரும் சொல்கிறார். தலாய்லாமாவும் தாரா பற்றிப் பேசுகிறார். இப்படிப்பட்ட கதைகள் தூர கிழக்கு பௌத்த தேசங்களில் வழங்கி வருகின்றன. மணிமேகலை காப்பியத்தில் வரும் மணிமேகலா தெய்வம், தாரையின் ஒரு வடிவம் எனலாம். அறியத்தருகிறது. முற்பிறப்பில் இலக்குமி என்ற பெயருடன் பிறந்தாள் மணிமேகலை. இலக்குமிக்கு இரு தமக்கைகள்.. அவர்களின் பெயர், தாரை – வீரை. தாரையே அடுத்த பிறவியில் மாதவி; சுதமதியே வீரை.
(‘Tara : Her Origins and Development’. Dharmachari Purna. Western Buddhist Review கட்டுரையும் அதைத் தன் கருத்துகளோடு எடுத்தாண்ட இணையத் தமிழ்க் கட்டுரையொன்றும் மேலுள்ள தகவல்களுக்குச் சான்றுகள்.)
