இரவல் குறியீடு/அனங்கன்

இது அடைக்கலம் தேடி அல்ல…
ஒரு நற்பேறின் குறியீடாய்
ஒரு சீனத்துச்சின்னம்…

நம்மிடம் இல்லாதது எவ்விடம்
இருக்கிறது…
எதையும் ஏற்றுக்கொள்ளும் மனம்

விலகிச்செல்வது எப்புள்ளியில்…?

ஒருசெழிப்பின் குறியீட்டை உங்கள் வீடுகளில்

நிலைநிறுத்துவதன் மூலம் …
நீங்கள்செழிப்படைந்து விடுவீர்களானால் …

உழைப்பு முன்நிறுத்தும் வாழ்க்கை நம்பிக்கை இழக்கிறது…

ஆயினும் ஏதேனும் ஒன்றைச்செய்தால் வாழ்வின்
துயரம் விடுபடும் என்று எண்ணும் மனங்கள் பெருகும்
நிலையில்….

எத்தனை அறங்களை கூவிப்பார்த்தென்ன….
நம்பிக்கை கைஉயர்த்தி நிற்கிறது வேறுவழியின்றி
.

2 Comments on “இரவல் குறியீடு/அனங்கன்”

  1. சமநிலைப் பார்வை. நம்புவோர்க்கு உழைப்பையும் கூறி ….நம்பிக்கையையும்..ம் …ஆதுரத்துடன் தட்டிக் கொடுத்திருக்கிறீர்கள்.

Comments are closed.