ஔவையார் தனிப்பாடல் (தொடர்ச்சி)/வளவ.துரையன்

11.

எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே – முட்டமேற்
கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னா யடா


சிலம்பி என்னும் தாசியிடம் 500 பொன்னுக்கு தான் பாடியப்பாதிப்பாடலை நிறைவுசெய்ததற்காக (காண் வெண்பா

12.

பொறாமையால் ஔவையை ‘அடீ’யென்று சொல்ல விரும்பி கம்பர், ‘ஒருகாலடீ நாலிலைப் பந்தலடீ” என்று சிலேடையாகச் சொல்லிப் பொருள்கேட்டபோது

ல ஔவை பாடியது. எட்டைக் குறிக்கும் தமிழ்க்குறி ‘அ’. கால் என்னும் பின்னத்தைக் குறிக்கும் தமிழ்க்குறி ‘வ’. இரண்டையும் சேர்த்தால் ‘அவ’.

எனவே எட்டேகால் லட்சணம் என்பது அவலட்சணம். எமன் ஏறும் குதிரை எருமைக்கடா. பெரியம்மை வாகனம் கழுதை. மேற்கூரை இல்லாத வீடு குட்டிச்சுவர். குலராமன் தூதுவன் குரங்கு. ஆரை = ஆராம்புல், யாரை. கைக்குள் உள்ளது ஆரைப்புல் என விடையைச் சொல்லி, அதன் மற்றொரு பொருளால் அவனை திட்டவும் செய்கிறார்.

வெய்யதாய் நறுவிதாய் வேண்டளவும் தின்பதுவாய்
நெய்தான் அளாவி நிறம்பசந்த – பொய்யா
அடகென்று சொல்லி அமுதத்தை யிட்டாள்
கடகம் செறிந்தகை யாள்


சிலம்பி என்பவள் ஔவையைப் பேணிய பாங்காக இப்பாடலைக் கூறுவர். அடகு = கீரை. அரிசி உணவு இல்லை. எண்ணெயிட்டு வதக்கிய கீரைதான் உள்ளது என்று சொல்லி உண்ணத் தந்தாள். அது விரும்பக்கூடியதாய், நறுமணம் மிக்கதாய், வயிறார வேண்டியமட்டும் தின்னக்கூடியதாய், பசுமை மாறாமல் சமைக்கப்பட்டு அமிழ்தம் போல் இருந்தது. ஔவைக்கு இடும்போது அவளுக்கு ஏற்பட்ட பூரிப்பால் அவளது தோள்வளையல்