அரியதொரு பாடம்/முருகு

அவ்வைத் தமிழ் காக்கும்
அருமருந்தென அதியன் தந்த

அவுரி நெல்லிக் கனி
அவ்வளவு அழகில்லை

ஆயினும் அதனுள் இருப்பது
ஆயுளைக் கூட்டும் அருமருந்து

அடுத்தவர் கண்ணுக்கு
அழகாய் வாழ்வதை விட

அருந்துயர் நீக்கி அவரவர் மனத்துக்கு
அழகாய் வாழ்வதே ஆனந்த வாழ்வு

கண் கவர் வாழ்வில் என்ன பயன்
மண் பயனுற வாழ்வதன்றோ பிறவிப் பயன்

அன்னைத் தமிழ் சொல்லித் தரும்
அரியதொரு பாடம் இது…

(Blue berry = அவுரி நெல்லிக்கனி, அதியமான் அவ்வைக்குத் தந்த அரிய வகை நெல்லிக்கனி)