சுரேஷ் ராஜகோபால்
என்வீட்டு வேப்பமர நிழலில்
நான் நாற்காலியில் அமர்ந்திருந்தேன்
நன்றாகக் காற்று வீசவே
சுகமாக இருந்தேன்
நேர்மேலே தண்ணீர் தொட்டி
மோட்டர் போட்டு நீர் நிரம்பக்
காத்திருந்தேன்; நிரம்பியதால்
நீர் வெளியே கொட்ட
மரமும் லேசா நனைந்து
என்மீதும் தெளித்தது
மரத்தின் மீதிருந்த
காக்கை வெகு வேகமாய்
சிறகடித்து எங்கோ பறந்தது.

Enjoyable atmosphere brought in front of my eyes.
நன்றி நண்பரே