
ஷெர்லாக் ஹோம்ஸ் & வாட்ஸனை வைத்து நிறைய ஜோக்குகள் உலாவுவது உண்டு. அதில் ஒன்று.
பக்கத்து காட்டில் உலா போன ஷெர்லாக் ஹோம்ஸும் வாட்ஸனும் அங்கே டெண்ட் அடித்து தங்கினார்கள். ராத்திரி 3 மணிக்கு கண்விழித்த ஹோம்ஸ் வாட்ஸனை எழுப்பினார். “வாட்ஸன், மேலே பாருங்கள். உங்களுக்கு என்ன தெரிகிறது?”
“நட்சத்திரங்கள் அழகாக அணிவகுத்திருக்கின்றன.”
“வேறென்ன தெரிகிறது?”
“நிலா இன்றைக்கு மிக அழகாக இருக்கிறது.”
“வேறென்ன தெரிகிறது?”
“ஒன்றும் தெரியவில்லையே?”
“நல்லா பாருங்க, நம்ம டெண்டை யாரோ தூக்கிட்டுப் போயிட்டாங்க!”
<>< ஹோம்ஸ் கதைகளிலும் துணுக்குகளிலும் அடிக்கடி சொல்லப்படும் ஒரு சம்பாஷணை.. “எப்படி கண்டுபிடித்தீர்கள் அதை?” என்று கேட்பார் வாட்ஸன். “எலிமெண்டரி, மை டியர் வாட்ஸன், எலிமெண்டரி!” என்று சொல்லிவிட்டு ஹோம்ஸ் விளக்குவார். ஆனால் ஒரிஜினல் ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளில் இந்த எலிமெண்டரி வரியே கிடையாது என்பார்கள். <><
எத்தனையோ பேர் ஷெர்லாக் ஹோம்ஸ் வேடத்தில் நடித்தாலும் இவரை மறக்க முடியாது. திரையின் ஹோம்ஸுக்கு அட்டகாசமான ‘ரோல்’ மாடல் கொடுத்தது இவர்தான்! நடித்த 14 படங்களும் ரசிகர்களின் ஃபேவரிட்.
Basil Rathbone…இன்று பிறந்த நாள்!

