பொம்மைகள் மனிதர்கள்/முஜிப் ரஹ்மான்

“நீயும் பொம்மை நானும் பொம்மை… நினைச்சு பார்த்தா எல்லாம் பொம்மை” பண்டைய காலத்தில் இருந்தே, மக்கள் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு பொம்மைகள் தேவை ஒப்புக்கொண்டுள்ளனர்.இப்படி எல்லாமுமாக இருக்கும் பொம்மையைப்பற்றி கொஞ்சம் ஆராய்ந்தால் என்ன?

குழந்தைகளிடமிருந்து பிரிக்க முடியாத ஒன்று பொம்மை. அவர்கள் கேட்ட பொம்மையை நாம் வாங்கிக் கொடுத்துவிட்டோம் என்றால், அதையே அவர்கள் உலகம் எனக் கருதி வாழத் தொடங்கிவிடுவர். பொம்மைகளை, குழந்தைகள் மட்டுமல்ல… இன்றைய இளம்பெண்களும் அதிகமாகவே விரும்புகின்றனர். ஆக, பலரும் விரும்பும்வகையில் பலவிதங்களில் பொம்மைகள் வடிவமைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அந்தவகையில் அன்று தொட்டு இன்றுவரை பிரபலமாக உலவிக்கொண்டிருக்கும் பார்பி பொம்மைகள், டெட்டி என்றழைக்கப்படும் விதம் விதமான கரடி பொம்மைகள், பழமையான தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் மரப்பாச்சி பொம்மைகள் போன்றனை மிக முக்கியமானவை. இவற்றுள், பார்பி பொம்மை குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களின் விருப்பமான ஒன்றாகும் ரூத் ஹேன்ட்லர். இவர், தன்னுடைய மகள் காகிதப் பொம்மைகளுக்குப் பெரியவர்களின் பெயர் வைத்து விளையாடுவதைக் கண்டு ரசிப்பார். குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் அந்தக் காலத்தில் மிகவும் சிறியதாக இருப்பதைக் கவனத்தில்கொண்ட ஹேன்ட்லர், ‘வளர்ந்து பருவமடைந்த ஓர் உடலைப் பொம்மையாகச் செய்ய வேண்டும்’ என்று தன் கணவர் எலியட்டிடம் கூறியபோது, ‘மேட்டல்’ பொய்மை நிறுவனத்தின் இணை நிறுவனரான அவர் மனைவியின் கூற்றினை கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில், ஹேண்ட்லர் தன்னுடைய குழந்தைகளான பார்பரா மற்றும் கென்னத் ஆகியோருடன் 1956 ம் ஆண்டு ஐரோப்பிய நாட்டுக்குச் சுற்றுலா சென்றபோது அங்கே, பில்ட் லில்லி என்று அழைக்கப்பட்ட வளர்ந்த மனித உருவம்கொண்ட ஜெர்மன் நாட்டுப் பொம்மைகளைப் பார்த்து வியந்துபோய், தன் நாட்டுக்குத் திரும்பியதும், இதேபோன்ற ஒரு பொம்மையை வடிவமைக்கும் பணியில் ஜேக் ரையான் என்கிற பொறியாளரின் உதவியுடன் இறங்கினார்.

தன் மகன் பார்பராவின் பெயரிலிருந்து தான் வடிவமைத்த பொம்மைக்கு ‘பார் பி’என்று பெயர் சூட்டினார் ஹேன்ட்ஸர். இந்தப் பொம்மை, அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் 1959 மார்ச் 9ம் திகதி அனைத்துலக விளையாட்டுப் பொருள் கள் கண்காட்சியில் முதன்முதலாக அறி முகம் செய்யப்பட்டு, முதல் ஆண்டிலேயே 3,50,000 பொம்மைகள் விற்பனையாகின என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து, மரப்பாச்சி பொம்மைகள் என்பன தென்னிந்தியாவில் நவராத்திரி பண்டிகையின்போது கொலுவில் வைக் கப்படும் மரப்பொம்மைகள் எனவும் கூறப்படுகின்றது . இவை குறிப்பாக செஞ்சந்தன மரம், முன்னிலவு மரம், ஊசியிலை மரம் போன்றவற்றால் செய்யப்படும் பாரம்பரிய பொம்மைகளாகும் . பொதுவாக ஆண் மற்றும் பெண் நிர்வாண வடிவில் ஜோடி களாக செய்யப்பட்ட பொம்மைகளான இவை பாரம்பரியமாக தாயிடமிருந்து மகளுக்கு சீதனமாக வழங்கப்பட்டு, அந் தக் காலத் திருமணங்களில் ஒளிப்படம் எடுக்கும் தொழில்நுட்பம் இல்லை. அத னால் திருமணமான தம்பதியர் தங்களுக்கு வழங்கப்பட்ட மரப்பாச்சி பொம்மைகள் வழியாகவே தங்களின் திருமணத்தை நினைவுகூர்ந்திருக்கின்றனர். ஒளிப்படங்கள், வீடியோ மூலம் தங்கள் பெற்றோரின் திருமணத்தைப் பார்க்க முடியாத குழந்தைகள், மரப்பாச்சி பொம்மைகள் வழியாக பார்த்தனர். நிர்வாணமாக உருவாக்கப்படும் மரப்பாச்சி பொம்மைகள் தம்பதிகளுக்கு வழங்கப்படும்போது திருமண உடையில் தான் அலங்கரிக்கப்பட்டு கொடுக்கப்படும். பிறகு அந்தப் பொம்மைகள் தம்பதிக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு விளையாடு வதற்காகத் தரப்படும்.குழந்தைகளுக்கு பரிசாக அளிக்கப்படும்

‘எதற்கெடுத்தாலும் தஞ்சாவூர் தலை யாட்டி பொம்மை மாதிரி தலையைத் தலையை ஆட்டிக்கொண்டு இருக்காதே’ எனப் பலரும் சொல்லக்கேட்டிருப்போம், உண் மையில் தஞ்சாவூரின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் இப்பொம்மை தஞ்சாவூரின் கலை மற்றும் பாரம்பரியத்தை பறை சாற்றுபவை என்றால் மிகையல்ல.காவிரிக் கரையோர களிமண் கொண்டு செய்யப்படும் இப்பொம்மைகள் எந்தப் பக்கம் சாய்த்தாலும் கீழே விழாமல் ஆடும். அதற்கான தனிச் சிறப்புடன் இந்தப் பொம்மையின் அடிப் பாகம் அமைக்கப்பட்டுள்ளது. தலையாட்டி பொம்மை என்பது ‘ராஜா’ மற்றும் ‘ராணி’
ஆகிய இரண்டு வகை பொம்மைகளுக் குமான பொதுப் பெயராக உள்ளது. இந்த பொம்மைகள் அடிப்பகுதியில் பெரியதா கவும், எடையில் மிகுந்ததாகவும், மேற்புறம் குறுகலாகவும், எடை குறைவாக இருக்கும் விதமாகவும் உருவாக்கப்படுகின்றன. இதனால்தான் இப்பொம்மைகள் எந்தப் பக்கம் சாய்த்துவிட்டாலும் சாய்ந்து கீழே விழுந் துவிடாமல் மீண்டும் முன்னர் இருந்த அதே செங்குத்து நிலையிலேயே நிற்கின் றன. 19ம் நூற்றாண்டில் இப்பொம்மைகள் முதலில் உருவாக்கப்பட்டு சரோபோஜி மன்னரின் காலத்தில் அமோக ஆதரவுடன் ஏகமாக உருவாக்கப்பட்டனவாம்.தஞ்சாவூர் தலையாட்டி உணர்த்துகின்ற தத்துவம் வார்த் தைகளில் சொல்ல முடியாதவைகளைக் கூட தலையசைப்பால் உணர்த்தி விட முடியும். இதனால், ஆர்ப்பாட்டமான பேச் சைத் தவிர்த்து ஆழமான உணர்வைத் தெரிவிக்க முடியும் என்பதையும் எடுத்துக் கூறுகின்றன இந்த பொம்மைகள், புவிஈர்ப்பு விசை செயல்பாட்டுக்கு ஏற்ப செங்குத்தாக எப்போதும் இருக்கும், இயங்கும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன. ராஜா- ராணி பொம்மைகள், நடன மங்கை பொம்மை கள், தாத்தா- பாட்டி பொம்மைகள் என தற்போது விதவிதமான தலையாட்டி பொம்மைகள் உருவாக்கப்படுகின்றன.

செஞ்சந்தன மரத்தால் செய்யப்பட்ட மரப்பாச்சி பொம்மைகள் மருத்துவ தன்மையுடன் விளங்குவதாக கருதப்படுகின்றன. குழந்தைகள் அவற்றை வாயில் வைத்து சப்பும்போது அதன் மருத்துவ குணங்கள் உடலுக்கு நன்மை செய்வதாக நம்புகின்றனர். ஆந்திர மாநிலத்தின் திருப்பதிதான் மரப்பாச்சி பொம்மைகள் பிறந்த இடம் என்று கூறப்படுகிறது. அதனாலேயே இந்தப் பொம்மைகளை வேங்கடாஜலபதி, பத்மாவதி என்றும் நம்புபவர்களும் மனிதர்களைப் படைப்பதற்கு முன்னால் மரப்பாச்சிகளை முதலில் வடிவமைத்துப் பார்த்தார் கடவுள் என்று கூறுபவர்களும் உண்டு.
ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் எவ்வளவோ பிரச்சினைகளைச் சந்தித்து மேலும் மேலும் கீழே செல்லும் நிலைக்குப் போனாலும் அத்தனையும் தன்னம்பிக்கை என்ற அருமருந்து இருந்தால் மீண்டும்
எழுந்து விட முடியும் என்பதுதான் இந்த பொம்மைகள் சொல்லும் செய்தியாகும்.

இதில் ஆச்சர்யமான ஒரு விஷையம். குழந்தைளுடன் சம்பந்தப்படுத்தி பார்க்கப்படும் பொம்மைகள், குழந்தைகள் கைகளில் கிடைக்கவிடாமலும் பாதுகாக்கப்பட்டன. அட, விலை அதிகமாக இருந்திருக்கும் அதனால்தான் என்று தோன்றினால், உண்மையில் இந்தப் பொம்மைகளின் விலை ஓர் உயிர். அதாவது ப்ளாக் மாஜிக் என்று சொல் லப்படும் மாந்திரீகத்தில் உபயோகப்படுத்தும் பொம்மைகள் இவை. பேய் பொம்மைகளாகவும் ஏவல் போன்ற முறைகளுக்கும் துவப்பட்ட பொம்மைகள். இவை மந்திர சக்திகள் கொண்டவகையாக கருதப்பட்டதால் குழந்தைகள் இவற்றின் அருகே செல்லவிடாமல் பாதுகாக்கப்பட்டனர்.

வூடூ போன்ற ப்ளாக் மாஜிக் சமாச்சாரங் களுக்கு ஆப்பிரிக்க நாடுகளில் உபயோ கப்படுத்தப்பட்ட இந்தப் பொம்மைகள் மிக ஆச்சர்யமாகக் கடவுளின் பிரதிநிதிகளா கவும் பார்க்கப்பட்டன. சடங்குகளில் பொம்மைகள் பிரதான பங்கும் வகித்தன. ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமின்றி ஜப்பான், ஐரோப்பிய நாடுகள், ஆசிய நாடுகளிலும் கருப்பு மாஜிக்கிற்கு பொம்மைகள் உபயோகபடுத்தப்பட்டன. யுரோபியன் பப்பட், நக்சி, போக்கியோ போன்ற பொம்மைகள் இந்த வகைப்படும். இதில் வடக்கு ஐரோப்பானின் கிட்சன் விச், அதிர்ஷ்ட தேவதையாகவே உணரப்பட்டது. ஆப்பிரிக்க நாடுகளில் வூடூ பொம்மைகள் கெடுதலையும், ஹோபி கசீனா பொம்மைகள் அதிர்ஷ்டம் கொடுக்கும் பொம்மைகளாகவும் கருதப்பட்டன.

20-ம் நூற்றாண்டிற்குப்பின் செலுலாய்ட், துணி, ரப்பர், பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட பொம்மைகள் குழந்தைகளிடையே புகழ்பெறத் தொடங்கின. இதனால் பாரம்பரியமான பல பொம்மைகள் இன்று வழக்கொழிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது .