தகனமேடைத் தொழிலாளி

நவஜீவன்

தகனமேடைத் தொழிலாளி

இறந்து போனான்;

ஆயிரம் தாய்தந்தையர்க்குக்

கொள்ளிவைத்த பிள்ளை;

அவன் வாரிசுக்குச் சொத்தாய்க் கிடைத்தது

பிணம் எரிக்கும் வேலை. 

           ***

ஆழ்கடலில் முத்துக் குளித்தவன்

மூழ்கி மரித்தான்

மதுக்குப்பியில்.           

*****

கோடிட்ட இடங்களை நிரப்பக் கேட்டு

கையில் தந்த கேள்வித்தாள்__

வாழ்க்கை.           

 *****

நகைமுரண் நிறைந்த

நாடகமே வாழ்க்கை;

தோற்றத்துக்கு நாயகன் வேடம்

ஆனால் வாய்த்தது

கோமாளிப் பாத்திரம்.           

*****

காலை முதல் மாலைவரை

ஓய்வறியாக் கடும் பயணம்;

ஆனாலும் போகவேண்டும்

மறுபாதி தூரம்

மலைவாயில் முதுசூரியன்.

2 Comments on “தகனமேடைத் தொழிலாளி”

Comments are closed.