இலக்கிய இன்பம் 48/கோவை எழிலன்

நாடகசாலை

வீரமாமுனிவர் தன் தேம்பாவணியில் யூதேயா நாட்டின் வளத்தைக் கூறும் போது அதை ஒரு நாடக மன்றாக உருவகிக்கிறார்.

அங்கு மலர்களில் மொய்க்கும் வண்டுகள் வீணை மீட்டக் குயில்கள் பாட்டிசைக்க மயில்கள் நடனம் ஆடுகின்றன.

தண்டலை மயில்கள் ஆட என்ற கம்ப இராமாயணப் பாடலை நினைவு படுத்தும் தேம்பாவணிப் பாடல் இது

மேல் வளர் அலர்ப் படம்
விரித்து, வீணைசெய்
பால் வளர் சுரும்பு இசை,
பாட மாங்குயில்
வால் வளர் மயில் நடம்
காண மற்றைப் புள்,
சால் வளர் நாடக
சாலை சோலையே.”