
பிரிந்து கிடந்த
காகிதத்துண்டுகளை
மகள் ஒன்றிணைத்தாள்
குளம்
பறவைகள்
மூங்கில் மரம்
மலர்கள்
வண்ணத்துப்பூச்சி
சூரியன்
அத்தனையும்
முழுமைப் பெற்றது
அவள் விரல்களால்..
இடம் தேடி
அலைந்தவள்
சற்றென்று
கிடைக்கும்
வெற்றுச்சுவற்றில்
ஒட்டிவிட்டு
மெல்ல நகைத்தாள்..
அவள் கைவிரல்கள்
அழைத்து வந்திருந்தது
வனத்தை…
வீடு
வனமாய்
மாறியிருந்தது.

அருமை
எனது இளைய மகளின் கை வண்ணத்தை நினைவூட்டியது
எளிமை அருமை