கண்ணதாசன் பிறந்தநாள்!/ஜெ. பாஸ்கரன்

“அந்தக் காலத்து ஒரு புலவனுக்கு அரசன் பணத்தைக் கையிலே அள்ளி, அப்படியே கொடுத்தாராம். ஒரு முடிச்சு.
அதை வாங்கப் போன புலவன், “அரசே உன்னுடைய கை மேலேயும், என்னுடைய கை கீழேயும் இருக்கக் கூடாது. நான் உலகத்துக்கெல்லாம் கூட அரசன். நீ இந்த நாட்டுக்குத்தான் அரசன். அதனாலே பணத்தை ஒரு தட்டிலே வைத்துக் கொள். நான் எடுத்துக்கொள்கிறேன்” என்றானாம். அரசன் அதே மாதிரி ஒரு தங்கத் தட்டில் புலவனுடைய தகுதிக்கேற்ப பண முடிப்பை வைத்துக்கொடுத்தாராம். அவன் அதனை எடுத்துக்கொண்டான். அதனை எடுத்துக்கொண்ட பிற்பாடு, புலவன் அரசனைப் பார்த்து, “பணத்தட்டு உமக்கா, எமக்கா?” என்றானாம். பணத் தட்டு என்றால் பணம் இருந்த தட்டு என்று அர்த்தம். பண முடை என்றும் அர்த்தம். தமக்கு முடை வரக்கூடாது என்று அரசன், “உமக்கே” என்றானாம். புலவன் அந்தத் தங்கத் தட்டையும் தூக்கிக் கொண்டு போனானாம். (பலத்த சிரிப்பு).

(டெட்ராயிட் தமிழ்ச் சங்கத்தில் கண்ணதாசன் நிகழ்த்திய சொற்பொழிவில் (அவரது கடைசிச் சொற்பொழிவும் இதுதான்) அக்காலப் புலவர்களைப் பற்றி சொன்னது! “இலக்கியப் பேருரைகள். கவியரசர் கண்ணதாசன். கண்ணதாசன் பதிப்பகம், சென்னை 600 017.)

எம் எஸ் வி பிறந்தநாள்!
இவர் இசையில் அவர் பாடல்!
https://youtu.be/S43iTnij-I0

2 Comments on “கண்ணதாசன் பிறந்தநாள்!/ஜெ. பாஸ்கரன்”

  1. கண்ணதாசனின் (அரசியல்) சொற்பொழிவுகளை நிறையக் கேட்டிருக்கிறேன். அவர் கூட்டங்களுக்கு நானே ஏற்பாடும் செய்திருக்கிறேன். இலக்கியக் கூட்டங்களை நேரில் கேட்டதில்லை. இந்தக் கடைசி சொற்பொழிவு உங்கள்குழாயில் கிடைக்கிறது. கேட்காதவர்கள் கேட்டே தீரவேண்டியது.

Comments are closed.