ஆசிரியர் பக்கம்/அழகியசிங்கர்

26.06.2022 – ஞாயிற்றுக்கிழமை

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 44

மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்

மோகினி: ரொம்ப நாட்கள் ஓடிவிட்டன நாம் சந்தித்து.
அழகியசிங்கர் : ஆமாம். 
மோகினி :  ஏன் இப்படி ஆயிற்று?
அழகியசிங்கர் : அலுப்புதான் ஒரே காரணம்.  எழுதுவதில் அலுப்பு, வாசிப்பதில் அலுப்பு.
மோகினி :  கடைசியாக நாம் மார்ச்சு மாதம்தான் சந்தித்தோம்.
அழகியசிங்கர் அதற்குப் பிறகு இன்றுதான் சந்தித்துப் பேசுகிறோம். 
ஜெகன் :  மூன்று மாதங்கள் மேல் ஆகிவிட்டது.
அழகியசிங்கர்: கண் பிரச்சினை ஒரு காரணம்.  
ஜெகன் : இடது கண்தானே.
அழகியசிங்கர் : ஆமாம்.  நான் கவனக்குறைவாக இருந்து விட்டேன்.  சிக்கலான அறுவை சிகிச்சையாக மாறி விட்டது. 
மோகினி :  சாதாரண கண் புரை சிகிச்சைதானே.
ஜெகன் :    அதானே
மோகினி :   பயந்து விட்டீர்களோ..
அழகியசிங்கர் : உண்மைதான்.  பயந்து விட்டேன்.  என்ன ஆகுமென்று தெரியவில்லை.  ஒரு கண் மருத்துவர் கண்ணே போகப் போறது என்று பயமுறுத்தினான்.
ஜெகன் :  நீங்கள் பொதுவாகப் பயந்த சுபாவம்.
அழகியசிங்கர் : அது ஒரு விதத்தில் உண்மைதான்.  எட்டு வருடத்திற்கு முன் என் வலது கண்ணிற்று கண் புரை சிகிச்சை எடுத்துக்கொண்டேன்.  அதன்பின் இடது கண்ணிற்று வந்தேன்.  கண் ரொம்பவும் பழுத்து விட்டது என்று மருத்துவர் கூறிவிட்டார்.
மோகினி :   உங்களுக்குச் சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோயெல்லாம் உண்டு.
அழகியசிங்கர் :  எல்லாவற்றையும் சரி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது.  சர்க்கரையைக் குறைக்க இன்சுலின் போட்டுக்கொண்டேன்.  எப்படியோ ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். என் கண்ணைக் காப்பாற்றிக் கொடுத்துவிட்டார் மருத்துவர் கல்பனா.
மோகினி :  ஒரு துயரமான சம்பவத்தை இன்னும் சொல்ல வில்லை நீங்கள்.
அழகியசிங்கர் : ஆமாம்.  குமுதம் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் இதயத் தாக்குதலால்  இறந்து விட்டார்.  அவருக்கு வயது 55தான் ஆகிறது. அவரை இழந்து நிற்கும் குடும்பத்திற்கு நாம் இரங்கல் தெரிவிக்க வேண்டும்.
ஜெகனும், மோகினியும் : நாங்களும் தெரிவிக்கிறோம் .
அழகியசிங்கர்.  இரவு வணக்கம்.

 

One Comment on “ஆசிரியர் பக்கம்/அழகியசிங்கர்”

Comments are closed.