
அவனுக்கு இப்போதெல்லாம்
கோபம் அதிகமாக வருகிறது.
இரவு நன்றாய் விடிந்த பின்னும்
தெருவிளக்குகள்
எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்தாலும்,
தெருக்குழாய் மூடப்படாமல்
வீணாய்க் கொட்டிக்கொண்டு
கிடந்தாலும்,
குப்பைகளை நடுவீதியில்
கொண்டுவந்து கொட்டுவதைப்
பார்க்கும்பொழுதும்,
அழுதுகொண்டே இருக்கும்
யு.கே.ஜி சிறுவனை மிரட்டிப்
பள்ளி வாகனத்தில் ஏற்றும்போதும்,
அதிகமாகச் சுமையேற்றி
அடித்துத் துன்புறுத்தி மாட்டை
இழுக்கச் சொல்லும்பொழுதும்,
பக்கத்து வீட்டுக்காரர்
மரம் அவன் வீட்டில்
இலைகளைக் கொட்டும்போதும்,
.
எதிர் வீட்டில் தினம் வரும்
கூர்க்காவிடம் வரவே இல்லை
எனக் காசு கொடுக்க
மறுக்கும்பொழுதும்
படித்துப் படித்துப் பார்த்தும்
ஒரு கவிதை
புரியாமல் போகும்போதும்
அதிகமாகத்தான் கோபம் வருகிறது.
