தொடரும் வாழ்க்கை…/முருகு

என்னைப் பற்றி நீயும்
உன்னைப் பற்றி நானும்
என்னையும் உன்னையும் பற்றி
அவர்களும்
அவர்களைப் பற்றி நானும் நீயும்
அறிந்ததும்
அதையொரு பிம்பமாய்
வரைந்ததும்
அதன்படி அவரவர்
வரையறுத்ததும் அதொவ்வொன்றுக்கும் ஒவ்வொன்றென
ஒழுகும் விதிமுறைப்படி
நானும் நீயும் அவர்களும்
வழிநடத்தலும்…. வாய்மொழிதலும்…. வினையாற்றலுமாய்…
தொடரும்
வாழ்க்கை…