இரவில் கூவும் குயில் /அனங்கன்

நள்ளிரவுதாண்டி அந்தக்குயில் தினசரி
கூவிக்கொண்டிருக்கிறது.

கூகை அலறும் இரவுகளில் குயில் கூவுவது முரணாய் இருக்கிறது…
வேறெந்தப் பறவை இனமும் இரவில் துணையை அழைப்பதாய்த் தெரியவில்லை.

அந்த
அமைதியை உடைக்கும் நேரங்களில் இருளோடு பேசிக்கொண்டிருப்பவனுக்கு
குயில் ஓசை ஒன்றும் இடைஞ்சலில்லை….

ஆயினும் பிரிந்தபோன மனைவியை அந்தக்குயிலின்
தாபமான அழைப்பு நினைவூட்டுவதைத் தவிர்க்கமுடியவில்லை.