
பத்திரிகைகளில் வெளிவந்த சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
பண்டிகை களின் போது வேலைகளை பெண்கள் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வர். அப்போது ஏற்படும் முதுகு வலி, கைவலி, கால்வலி எல் லாம், மற்றவர் பாராட்டும் போது கிடைக்கும் மகிழ்ச்சியின் முன் பறந்து போகும் என படைத்துள்ளார்.
கதைகளில் ‘ப்ளூ டூத், பயர் ஸ்டிக்’ என்னும் பெயர்களைப் பார்த்ததும், தமிழ் மொழிபெயர்ப்பு கொடுத்த நகைச்சுவையை உணர்ந்து கொள்ள முடிகிறது.
வீட்டில் எல்லாரும் ‘வத்திக் குச்சியின் துணையுடன் ஒத் தச் செருப்பு பார்த்துக் கொண் டிருக்கும் போது, இரட்டைச் செருப்பை மாட்டிக் கொண்டு கிளம்பினார்’ என்று சொல் லும் போது, படைப்பாளியின் மொழிக் குறும்பு கலகலக்க வைக்கிறது.
பூரிக்கத்தக்க கதைகளை கொண்ட தொகுப்பு நுால்.
ஆசிரியர்: ரேவதி பாலு வெளியீடு: விருட்சம், சென்னை . அலைபேசி: 94441 13205
பக்கம்: 105 விலை : ரூ.120
