
பிரசவ மருத்துமனையில்
பயங்கர வலியுடன்
நள்ளிரவில்
சேர்க்கப்பட்ட அம்மாவை
பரிசோதித்த மருத்துவர்
சாந்தகுமாரி
கோபமாக
“சும்மா கத்தாதெ. எல்லாம் காலெலதான் ஆகும்”
என்று கூறிவிட்டு
அருகில் இருந்த தன் வீட்டிற்கு படுக்கப் போய்விட
சிறிது நேரத்தில்
என் தலை லேசாக தெரிய
செவலி அலற
சாந்தகுமாரி
அசாந்தமாக
எனை வெளியே கொண்டு வர
நான் வலியால் ஊளையிட்டேன்
என்று கேள்வி
அப்போதிலிருந்தே
ஊருடன்
ஒத்துப் போகத் தெரியாமல் நான் இழந்தது பல
தலைகாணி மந்திரம்
போடத் தெரியாததால்
ஒரு கவசம்
கால் பிடிக்கத் தெரியாததால்
சில பதவி உயர்வுகள்
அதிகாரம் செய்யத் தெரியாததால்
சிலரின்
மரியாதை
பெருமையடித்துக் கொள்ளத் தெரியாததால்
சிலரின் மதிப்பு
இப்படி பல
அதனால் என்ன?
என் மதிப்பை பெற்ற
சிலரின் மதிப்பு
எனது அன்பின் ஆழத்தை அறிந்த
சிலரின் அன்பு –
இது போதுமே எனக்கு
4/7/22 காலை 11 மணி

அருமை
அருமை
நன்றி
தாயின் வேதனை
மழலையால் இனிக்குமே.
-நல்ல கவிதை
நன்றி
ஊருடன் ஒத்துப்போய்
உலக நாயகியென்று
உருப்படாத கூட்டம்
ஊஞ்சலில் ஏற்றுவது விட
உங்கள் வழியே நடந்து
உண்மை அன்பர்களுடன்
உடனிருப்பதே இன்பம்.
உண்மை வார்த்தைகள்!
ஆம்.. குறையொன்றுமில்லை
அருமை